Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
அமெரிக்கா மீது அணுவாயுத தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அல்-ஹைடா திட்டம்
[07 - April - 2008] [Font Size - A - A - A]
அமெரிக்காவை தாக்குவதற்காக அணுவாயுதத் தொழில்நுட்பத்தை அல்-ஹைடா வாங்க முயற்சித்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தங்கள் பாதுகாப்புக்காக அணுவாயுதத் தொழில்நுட்பத்தை பெற பல நாடுகள் விரும்புகின்றன. ஆனால், அணுவாயுதத் தாக்குதல் நடத்த அல்-ஹைடா பயங்கரவாதிகள் விரும்புகின்றனர். அதற்காக அணுவாயுதத் தொழில்நுட்பத்தை எப்படியாவது பெற வேண்டும் என்பதே அவர்களது திட்டம் என்று அமெரிக்க உளவுத்துறையின் மூத்த அதிகாரி சார்லல் ஆலன் அமெரிக்க எம்.பி. க்களிடம் தெரிவித்துள்ளார்.

அல்-ஹைடா பயங்கரவாதிகளின் அமெரிக்காவைத் தாக்கும் பல திட்டங்களில் அணுவாயுதத் தாக்குதலும் ஒன்று. நியூயோர்க்கில் பல மாடிக் கட்டிடத்தில் விமானத்தை மோதி கட்டிடங்களை தகர்த்தனர் அல்-ஹைடா அமைப்பினர். அத்தாக்குதலில் மிகச் சிலர் மட்டுமே ஈடுபட்டனர்.

அதேபோன்று அணுவாயுதத் தாக்குதலிலும் அந்த இயக்கத்தைச் சேர்ந்த மிகச் சிலர் மட்டுமே ஈடுபடுவர். அணுவாயுதத் தொழில் நுட்பத்தைப் பெறுவதற்காக ஏற்கெனவே சில வல்லுநர்கள் அந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கக் கூடும். எனவே நாம் இதுவரை சந்திக்காத புதிய வழியில் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. அதைக் கண்டுபிடித்துத் தடுக்க வேண்டியது எமது கடமை என அவர் தெரிவித்தார்.

மேலும் ,அணுவைப் பிளக்கும் கருவி இல்லாமல் அணுவாயுதம் தயாரிக்க முடியாது. எனவே அல்-ஹைடா பயங்கரவாதிகள், அணுவாயுதத்தைத் திருடியோ அல்லது யாரிடமாவது கள்ளத்தனமாக வாங்கியோ அதனை அவர்கள் பயன்படுத்தக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
அமெரிக்கா மீது அணுவாயுத தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அல்-ஹைடா திட்டம்
ஈராக்குக்கு செல்லும் பிரிட்டிஷ் படையினருக்கு` மகாபாரத பாடம்'
ஒபாமாவின் சவாலுக்கு பதிலாக வருமானவரி கணக்கை வெளியிட்டது கிளின்டன்- ஹிலாரி தம்பதி
தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்தியத் தமிழர்களால் மலேசியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
கனடாவில் எய்ட்ஸ் பரப்பிய இளைஞருக்கு 18 ஆண்டுகள் சிறை
நேபாளத்தின் தேர்தலை முன்னிட்டு மதுபான விற்பனைக்குத் தடை
எதிர்க்கட்சி அலுவலகங்கள் மீது சிம்பாப்வே பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கை
சர்வதேச விண்வெளி மையத்துடன் ஆளில்லா விண்கலம் `ஜூல்ஸ் வெர்னே' வெற்றிகரமாக இணைந்தது
கனடாவின் வரலாற்று புகழ்மிக்க கட்டடம் தீ விபத்தில் நாசம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com