Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
5 வகையான வேலைத் திட்டங்கள் மூலம் எதிர்காலத்தில் கல்வி கற்ற சமூகம் உருவாகும்
[07 - April - 2008] [Font Size - A - A - A]
* ரூம் ரூ ரீட் அமைப்பின் திட்டப் பணிப்பாளர்

"பாடசாலைகளில் சகல வசதிகளுடன் கல்வி கற்பதற்கு எமது அமைப்பின் மூலம் கட்டிடங்களும் புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. எமது சேவை கற்பிட்டி தொடக்கம் வென்னப்புவ வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ரூம் ரூ ரீட் (அறைக்குள் வாசிப்பு) அமைப்பின் திட்டப் பணிப்பாளர் எஸ்.ஐ.எம்.றியாஸ் தெரிவித்தார்.

புத்தளம் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட கடையாமோட்டை, முந்தல் பிரதேசங்களிலுள்ள சிங்கள மகா வித்தியாலயம் மற்றும் புளிச்சாக்குளம் உமர் பாரூக் முஸ்லிம் மகா வித்தியாலங்களில் பாடசாலை கட்டிடங்களை வைபவ ரீதியாக திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திட்டப் பணிப்பாளர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்;

"எமது அமைப்பின் மூலம் ஐந்து வகையான வேலைத் திட்டங்கள் அமுல் செய்யப்பட்டு வருகின்றன. பாலர் பள்ளிகள் மற்றும் பாடசாலைகளுக்கான கட்டிடங்களை அமைத்தல், மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கல், நூலகங்களை அமைத்தல், உள்நாட்டில் உள்ள மொழிகளில் நூல்களை அச்சடித்து இலவசமாக மாணவர்களுக்கு வழங்குதல் என்பனவையே அவையாகும்.

ஆகவே, இவைகளை நாம் வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் மாணவர்கள் கல்வி கற்ற சமூகமாக விளங்கி அச்சமூகத்தின் ஊடாகவே உலகத்தை மாற்ற முடியும். எமது அமைப்பு 8 நாடுகளில் இயங்கி வருகின்றது. 2003 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரை 107 பாலர் பாடசாலைகளும், 245 நூலகங்களையும் அமைத்து கொடுத்துள்ளோம். புத்தளம் மாவட்டத்தில் 65 நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புத்தளம், நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் உள்ள 300 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டு வருகின்றது.

ஆகவே, எமது அமைப்பு கல்வியை வளர்ச்சியடைய செய்வதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இவ்வைபவத்தில் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் தர்ஷன ரத்நாயக்க, மற்றும் புத்தளம் மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர் முகமட் நிலாம் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

Email this page Your Opinion Print this page
வடக்கு போர்முனையில் வெற்றி பெறும்வரை ஏ-9 வீதி திறக்கப்படாது
பொறுமை காத்து பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்
பசிலின் பாதுகாப்புக்கு சென்ற 2 பாதுகாப்பு அதிகாரிகள் வாகன விபத்தில் உயிரிழப்பு
கிழக்குத்தேர்தலை நீதியாக நடாத்துவதற்காக பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களையுங்கள்
வட பகுதிக்கான போக்குவரத்து இடைநிறுத்தம்
மோசடியான முறையில் தேர்தல் இடம்பெறப்போவதன் வெளிப்பாடே புலிகளின் பெயரில் போலி வேட்பு மனுத்தாக்கல்
கிழக்கு மாகாண சபை தேர்தல் நடக்கும் தினத்திலிருந்து அரசின் வீழ்ச்சி ஆரம்பமாகும்
கத்தோலிக்க பாடசாலைகளில் கத்தோலிக்க பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்
நியூயோர்க்கில் இலங்கை அலுவலகங்கள் முன்பாக சர்வதேச மன்னிப்புச்சபை பேரணி நடத்தும்
தேங்காய் எண்ணெய், மரக்கறி எண்ணெயின் விலை நாற்பது ரூபாவால் குறைப்பு
ஒரு மூடை உரத்தை 1500 ரூபாவிற்கு வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கையெடுத்துள்ளது
ஹக்கீமின் பாதுகாப்பு குறைப்பு வழங்கப்பட்ட வாகனமும் வாபஸ்
மனித உரிமைகளை மேம்படுத்துவதில் தங்கியிருக்கும் இலங்கையின் ஏற்றுமதி
`சமாதானம், சகவாழ்வை ஏற்படுத்த பாடுபட்டவர் அமைச்சர் ஜெயராஜ்'
`சிறந்த தலைமைத்துவத்தையும் பேச்சாற்றலையும் கொண்டவர் அமரர் ஜெயராஜ்'
`தன்னலம் பாராது அனைத்து இன மக்களுக்காகவும் சேவையாற்றியவர்'
மூவின மக்களதும் ஒற்றுமைக்காக குரல் கொடுத்தவர் அமைச்சர் ஜெயராஜ்
அரசியல் மாற்றங்களினால் ஒரு போதும் பொருட்களின் விலை உயர்வை மாற்ற முடியாது
தனியார் பஸ்களில் மே மாதம் முதல் பயணச்சீட்டு வழங்குவது கட்டாயம்
இந்து இளைஞர் மன்றம் நடத்தும் தென்னிந்திய திருத்தல யாத்திரை
2008 இறுதிவரை சிறிய உற்பத்தித்துறையை ஊக்குவிக்க வர்த்தக சம்மேளனம் உதவும்
மக்கள் அச்சமின்றி வாழும் நிலையை உருவாக்க மிதிவெடி அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுப்பு
இரு மாத காலங்களாக மூடப்பட்டிருந்த கதிர்காமம் - புத்தள வீதியை திறக்க ஏற்பாடு
புதுவருட விசேட பொது வைபவங்களில் ஒலிபெருக்கி பாவனைக்கு பொலிஸ் அனுமதிபெற வேண்டும்
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களம் முஸ்லிம் பிரதேசங்களிலேயே தீவிர பிரசாரம்
அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நாளை தேர்தல் ஆணையாளர் சந்திப்பு
புதுவருட காலத்தை முன்னிட்டு மேலதிக சேவையில் 2000 பஸ்கள்
ஜனாதிபதியினால் கிழக்கு விடுவிக்கப்பட்டதையடுத்தே ஜனநாயக ரீதியிலான தேர்தலை எதிர் கொள்கின்றோம்
சித்திரைப் புத்தாண்டை அறநெறி ஆண்டாகவும் தேசிய சமாதான ஆண்டாகவும் வரவேற்போம்
13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் எந்த மாகாண சபையும் செயற்படவில்லை
மீண்டுமொரு வரலாற்றுத் தவறு தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது
கல்முனை வலய ஆளணியினரின் குழு மேற்பார்வை ஜனநாயக ரீதியில் இடம்பெற வேண்டியது அவசியம்
5 வகையான வேலைத் திட்டங்கள் மூலம் எதிர்காலத்தில் கல்வி கற்ற சமூகம் உருவாகும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com