* கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு
கல்முனை வலய ஆளணியினரின் குழு மேற்பார்வை ஜனநாயக ரீதியில் இடம் பெற வேண்டும் என்பதையே விரும்புகிறேன். இதனை முறையாக வடிமைக்க மேற்பார்வையாளர் சிறந்த நற்புதவியாளராக மாற வேண்டும். பாடசாலையில் கால்வைத்ததும் எதிரியாக இருப்பினும் அவற்றை யெல்லாம் மறந்து ஒன்றுமறியாத மாணவர்களின் கல்வி இலக்கையே நினைவாகக் கொள்ள வேண்டுமெனத் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர். எம்.ரீ.ஏ. நிசாம் தெரிவித்தார்.
கல்முனை வலயக் கல்வி அலுவலத்தின் கீழுள்ள பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட குழு மேற்பார்வையின் இனங்காணப்பட்ட பிரச்சினைகுறித்த விடயங்களுக்கு தீர்வு காணுதல் எனும் தலைப்பில் இடம் பெற்ற கூட்டத்தில் உறையாற்றுகையிலே இதனைத் தெரிவித்தார்.
அண்மையில் நிந்தவூர் அல் அஷ்ரத் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் 58 பாடசாலை அதிபர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் பாட ஆசிரிய ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.
வலயக் கல்விப்பணிப்பாளர்மேலும் தெரிவித்ததாவது:
"வெளிவாரி மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு முன் ஒரு பரீட்சார்த்த திட்டமாகவே குழுப்பரிசோதனையை மேற்கொண்டதோடு அதன் முடிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதுடன் மேற்பார்வை அணுகுமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வழிகோலியுள்து. இங்கு அதிபர்களால் முன் வைக்கப்பட்ட விமர்சன ரீதியான கருத்துகள் இதன் வெற்றியை பறைசாற்றுவதோடு மாணவர்களின் கல்விப் பசியை தீர்க்க நல்ல சாதகமான சூழ்நிலை உருவாகிவருவதுகுறித்தும் மகிழ்வடைகிறேன்.
சம்பள அதிகரிப்பு, ஆசிரியசேவை பதவி உயர்வு உள்ளீர்ப்பு குறித்து துறைசார் நிபுணத்துவமுடைய ஆசிரியர்களால் தேர்ச்சிமைய கலைத்திட்டம் குறித்து விளங்கிக்கொள்ள முடியாமல் இருப்பதுதான் பெரும் விந்தையாகவுள்ளது.
பரீட்சார்த்த குழுப் பரிசோதனையில் தவறுகள் இடம் பெற்றிருக்க மாட்டாதென நான் கூறவில்லை. இருந்தாலும் அதனை இரண்டாம் தவணையில் நிவர்த்திக்க முடியும்.ஏபி, சி பாடசாலைகளின் மாணவர் கற்றல் ஆசிரியர் கற்பித்தல் குறித்த ஆய்வறிக்கை கோட்டக் கல்விப் பணிப்பாளர்களால் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆசிரியர்கற்பித்தல் மேம்படவும், மாணவர்கற்பித்தல் அதிகரிக்கவும் சரியான வழி பதில் பாட ஓழுங்கு மேம்படுத்தப் படுவதாகும் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயம் உட்பட இன்னம் பல பாடசாலைகள் இதற்கு நல்ல உதாரணம் ஆகும்" எனவும் கூறினார்.