Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மீண்டுமொரு வரலாற்றுத் தவறு தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது
[07 - April - 2008] [Font Size - A - A - A]
* இ.தே.தொ.கா.பொதுச் செயலாளர் தெரிவிப்பு

13 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்ற விவாதமோ வேறு எவரினதும் சிபாரிசோ தேவையில்லை என்று இலங்கைத் தேசிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இரா. தங்கவேலு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

அனைத்துக் கட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடும் நிறைவேற்றப்பட்டது தான் 13 ஆவது அரசியலமைப்புச் சட்டமாகும். இதனடிப்படையிலேயே 1988 ஆம் ஆண்டு வட- கிழக்கு உட்பட அனைத்து மாகாணங்களுக்கும் மாகாணசபைத் தேர்தல் இடம்பெற்றது. இந்தத் தேர்தலைத் தொடர்ந்து முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தலைமையில் தனித் தமிழ் மாகாணமாக வட,கிழக்கு மாகாணம் இயங்கியது. மேலும் வட,கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த மூவின மக்களின் பிரதிநிதித்துவத்தையும் இந்த மாகாணம் கொண்டிருந்தது.

இந்த நிலையில் 13 ஆவது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து அதிகாரங்களையும் வழங்கியிருந்தால் வரதராஜப் பெருமாளுக்கு வட கிழக்கு மாகாணத்தைத் தன்னிச்சையாக தமிழ் ஈழமாகப் பிரகடனப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

இவ்வாறானதொரு நிலைமையேற்படுவதற்கு அன்றைய ஜனாதிபதியும் அரசாங்கமும் விட்ட பெரிய தவறே காரணமாகும். மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரம் அன்று வழங்கப்பட்டிருந்தால் இன்று இந்த மனித அவலங்கள் ஏற்பட்டிருக்காது.

இவ்வாறானதொரு நிலைமையில் 13 ஆவது அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்காக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் 64 தடவைகளுக்கும் மேல் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டங்களால் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது பெரும்பான்மை மக்களைத் திருப்திப்படுத்தி சிறுபான்மை மக்களை ஏமாற்றும் கைங்கரியமாகும்.

இந்த நிலையில் கிழக்கில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தியதன் மூலம் ஜனநாயகத்தை உயிர்ப்பித்துவிட்டோம் என்று அரசாங்க தரப்புமார் தட்டுவதானது நாட்டையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயலாகும். இவ்வாறான விஷப்பரீட்சைகள் மேலும் பிரச்சினைகளையே பெருக்கும்.

1981 ஆம் ஆண்டளவில் முன்னாள் அமைச்சர்களான சிறில்மெத்யூ, காமினி திசாநாயக்க போன்றோர் குடாநாட்டிலே உள்ளூராட்சி தேர்தலை நடத்தியபோதும் அதற்கு எதிராக அரசாங்கத்திலிருந்துகொண்டே அமரர் தொண்டமான் காட்டிய எதிர்ப்பையும் எச்சரிக்கையையும் மீறி தன்னிச்சையாக செயற்பட்டமையே குடாநாடு தீயில் எரிவதற்குக் காரணமாக அமைந்தது.

இவ்வாறானதொரு வரலாற்று தவறே தற்போது கிழக்கிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே 13 ஆவது திருத்தச் சட்டத்தை தூக்கிப்பிடிப்பதையும் கிழக்கிலங்கையிலே ஜனநாயகத்தைக் கொண்டு வந்துவிட்டோம் என்று தம்பட்டம் அடிப்பதைவிட்டு விட்டு விட்டு இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண அரசாங்கம் முன்வரவேண்டும்.

Email this page Your Opinion Print this page
வடக்கு போர்முனையில் வெற்றி பெறும்வரை ஏ-9 வீதி திறக்கப்படாது
பொறுமை காத்து பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்
பசிலின் பாதுகாப்புக்கு சென்ற 2 பாதுகாப்பு அதிகாரிகள் வாகன விபத்தில் உயிரிழப்பு
கிழக்குத்தேர்தலை நீதியாக நடாத்துவதற்காக பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களையுங்கள்
வட பகுதிக்கான போக்குவரத்து இடைநிறுத்தம்
மோசடியான முறையில் தேர்தல் இடம்பெறப்போவதன் வெளிப்பாடே புலிகளின் பெயரில் போலி வேட்பு மனுத்தாக்கல்
கிழக்கு மாகாண சபை தேர்தல் நடக்கும் தினத்திலிருந்து அரசின் வீழ்ச்சி ஆரம்பமாகும்
கத்தோலிக்க பாடசாலைகளில் கத்தோலிக்க பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்
நியூயோர்க்கில் இலங்கை அலுவலகங்கள் முன்பாக சர்வதேச மன்னிப்புச்சபை பேரணி நடத்தும்
தேங்காய் எண்ணெய், மரக்கறி எண்ணெயின் விலை நாற்பது ரூபாவால் குறைப்பு
ஒரு மூடை உரத்தை 1500 ரூபாவிற்கு வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கையெடுத்துள்ளது
ஹக்கீமின் பாதுகாப்பு குறைப்பு வழங்கப்பட்ட வாகனமும் வாபஸ்
மனித உரிமைகளை மேம்படுத்துவதில் தங்கியிருக்கும் இலங்கையின் ஏற்றுமதி
`சமாதானம், சகவாழ்வை ஏற்படுத்த பாடுபட்டவர் அமைச்சர் ஜெயராஜ்'
`சிறந்த தலைமைத்துவத்தையும் பேச்சாற்றலையும் கொண்டவர் அமரர் ஜெயராஜ்'
`தன்னலம் பாராது அனைத்து இன மக்களுக்காகவும் சேவையாற்றியவர்'
மூவின மக்களதும் ஒற்றுமைக்காக குரல் கொடுத்தவர் அமைச்சர் ஜெயராஜ்
அரசியல் மாற்றங்களினால் ஒரு போதும் பொருட்களின் விலை உயர்வை மாற்ற முடியாது
தனியார் பஸ்களில் மே மாதம் முதல் பயணச்சீட்டு வழங்குவது கட்டாயம்
இந்து இளைஞர் மன்றம் நடத்தும் தென்னிந்திய திருத்தல யாத்திரை
2008 இறுதிவரை சிறிய உற்பத்தித்துறையை ஊக்குவிக்க வர்த்தக சம்மேளனம் உதவும்
மக்கள் அச்சமின்றி வாழும் நிலையை உருவாக்க மிதிவெடி அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுப்பு
இரு மாத காலங்களாக மூடப்பட்டிருந்த கதிர்காமம் - புத்தள வீதியை திறக்க ஏற்பாடு
புதுவருட விசேட பொது வைபவங்களில் ஒலிபெருக்கி பாவனைக்கு பொலிஸ் அனுமதிபெற வேண்டும்
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களம் முஸ்லிம் பிரதேசங்களிலேயே தீவிர பிரசாரம்
அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நாளை தேர்தல் ஆணையாளர் சந்திப்பு
புதுவருட காலத்தை முன்னிட்டு மேலதிக சேவையில் 2000 பஸ்கள்
ஜனாதிபதியினால் கிழக்கு விடுவிக்கப்பட்டதையடுத்தே ஜனநாயக ரீதியிலான தேர்தலை எதிர் கொள்கின்றோம்
சித்திரைப் புத்தாண்டை அறநெறி ஆண்டாகவும் தேசிய சமாதான ஆண்டாகவும் வரவேற்போம்
13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் எந்த மாகாண சபையும் செயற்படவில்லை
மீண்டுமொரு வரலாற்றுத் தவறு தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது
கல்முனை வலய ஆளணியினரின் குழு மேற்பார்வை ஜனநாயக ரீதியில் இடம்பெற வேண்டியது அவசியம்
5 வகையான வேலைத் திட்டங்கள் மூலம் எதிர்காலத்தில் கல்வி கற்ற சமூகம் உருவாகும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com