* இந்து அரச ஊழியர் இணையம்
வெள்ளிக்கிழமை பொது விடுமுறையாகவும் தாவர உணவு தினமாகவும் மலரவும் சர்வ சமயிகளும் இந்துசமய மரபுகளை ஏற்று, பாதுகாப்பிற்கு தேசிய ரீதியாக அங்கீகாரம் வழங்க வேண்டுமென இந்து அரச ஊழியர்கள் இணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக விடுத்த அறிக்கையில்,
பௌத்த சமய மரபுகளை ஏற்று போயா பொது விடுமுறையும் இஸ்லாமிய சமயவழிபாட்டு உரிமைகள் ஏற்கப்பட்டு வெள்ளிக்கிழமை பகுதிநேர விடுமுறை தினமாக விஷேட பாடசாலை நாட்காட்டிகள் நடைமுறையில் உள்ளன.
இவ்வகையில் இந்து-பௌத்த சமய உறவுகள் சித்திரைப் புத்தாண்டை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பேணுவதுடன், வருடாந்த பஞ்சாங்க மரபுகளின் தொன்மையாகவும் விளங்குகின்றது.
போத்துகீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் வருகையினால் ஏற்பட்ட நிர்வாக மாற்றங்கள் சுதேச சமயிகளிடையே ஏற்படுத்திய பாதிப்புகள் விடுபட வழிகாட்டுதல் வேண்டும்.
தேசிய சமாதானம் மலர சித்திரைப்புத்தாண்டில் தாவர உணவு உற்பத்திகள், தொழில் அபிவிருத்திகள், கல்வி அபிவிருத்தி, பசுப்பாதுகாப்புகள் மூலம் தேசிய மொழிப்பயன்பாடுகளை விரிவாக்கி சமயசமரசமும் மொழிச்சமநிலையும் சிறப்புற அமைய பிராத்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.