Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
புதுவருட விசேட பொது வைபவங்களில் ஒலிபெருக்கி பாவனைக்கு பொலிஸ் அனுமதிபெற வேண்டும்
[07 - April - 2008] [Font Size - A - A - A]
தமிழ்- சிங்களப் புதுவருடத்தை முன்னிட்டு இடம்பெறும் விசேட பொது வைபவங்களிலும் மற்றும் மலிவு விற்பனை, வியாபாரம் மேம்படுத்தல் நடவடிக்கைகளிலும் ஒலிபெருக்கிச் சாதனைங்களைப் பயன்படுத்துவதற்கு பொலிஸ் நிலையங்களில் அனுமதி பெறவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு தனிநபரும் இத்தகைய ஒலிபெருக்கி பாவனையால் பாதிக்கப்படாதவாறு அவற்றைப் பயன்படுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் பொலிஸ் நிலையங்களினூடாக அறிவித்துள்ளது.

பண்டிகைக்காலத்தில் அதிர்ஷ்டலாபச் சீட்டு விற்பனையாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சைக்கிளோட்டப் போட்டிகள் மற்றும் நடமாடும் வாகன விற்பனைகள், புதுவருடக் கொண்டாட்டங்களில் இரவு, பகலாக நாள் முழுவதும் ஒலிபெருக்கி பயன்படுத்துவது வழமை. எனினும், பொலிஸ் அனுமதி பெற்று யாரையும் பாதிக்காத விதத்தில் உரிய ஒலி அளவில் இவற்றையும் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

தற்போது இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரை ஒலிபெருக்கி பாவனைக் கட்டுப்பாடு உள்ளதை சுட்டிக்காட்டி வரையறுக்கப்பட்ட சூழல் திட்டமிடல் அமைப்பு நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததை அடுத்தே இவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த அமைப்பின் சார்பில் கருத்துத் தெரிவித்த உதித்த எஹலஹேவ; பகல் நேரங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அளவில் விளம்பர நடவடிக்கைகளுக்காகவும் விற்பனைப் பிரசாரம் போன்றவற்றுக்குமாக ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவது குற்றமாகும்.

எனவே, பொலிஸார் மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளுக்கமைய இவற்றைப் பயன்படுத்தலாம். இதற்கான அனுமதியை சகல பொலிஸ் நிலையங்களிலும் உரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் பெற்றுக்கொள்ளலாம்.

புதுவருடக் கொண்டாட்டங்களில் பொதுமக்களுக்கு இடைஞ்சல் அளிக்காத வகையில் பெரிய மைதானங்களில் நடத்தப்படுமாயின் இதற்கான அனுமதியை பொலிஸார் எந்தவித ஆட்சேபனையுமின்றி உடனடியாகவே வழங்குவர்.

அண்மையில் குடியிருப்பாளர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து பொல்கொட, மொறட்டுவ ஆகிய இடங்களிலுள்ள இரு ஹோட்டல்களில் பகல்வேளையில் இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கியை பயன்படுத்தியமைக்காக ஒரு இலட்சம் ரூபாவை தண்டமாக பொலிஸார் அறவிட்டதுடன், ஹோட்டல் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
வடக்கு போர்முனையில் வெற்றி பெறும்வரை ஏ-9 வீதி திறக்கப்படாது
பொறுமை காத்து பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்
பசிலின் பாதுகாப்புக்கு சென்ற 2 பாதுகாப்பு அதிகாரிகள் வாகன விபத்தில் உயிரிழப்பு
கிழக்குத்தேர்தலை நீதியாக நடாத்துவதற்காக பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களையுங்கள்
வட பகுதிக்கான போக்குவரத்து இடைநிறுத்தம்
மோசடியான முறையில் தேர்தல் இடம்பெறப்போவதன் வெளிப்பாடே புலிகளின் பெயரில் போலி வேட்பு மனுத்தாக்கல்
கிழக்கு மாகாண சபை தேர்தல் நடக்கும் தினத்திலிருந்து அரசின் வீழ்ச்சி ஆரம்பமாகும்
கத்தோலிக்க பாடசாலைகளில் கத்தோலிக்க பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்
நியூயோர்க்கில் இலங்கை அலுவலகங்கள் முன்பாக சர்வதேச மன்னிப்புச்சபை பேரணி நடத்தும்
தேங்காய் எண்ணெய், மரக்கறி எண்ணெயின் விலை நாற்பது ரூபாவால் குறைப்பு
ஒரு மூடை உரத்தை 1500 ரூபாவிற்கு வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கையெடுத்துள்ளது
ஹக்கீமின் பாதுகாப்பு குறைப்பு வழங்கப்பட்ட வாகனமும் வாபஸ்
மனித உரிமைகளை மேம்படுத்துவதில் தங்கியிருக்கும் இலங்கையின் ஏற்றுமதி
`சமாதானம், சகவாழ்வை ஏற்படுத்த பாடுபட்டவர் அமைச்சர் ஜெயராஜ்'
`சிறந்த தலைமைத்துவத்தையும் பேச்சாற்றலையும் கொண்டவர் அமரர் ஜெயராஜ்'
`தன்னலம் பாராது அனைத்து இன மக்களுக்காகவும் சேவையாற்றியவர்'
மூவின மக்களதும் ஒற்றுமைக்காக குரல் கொடுத்தவர் அமைச்சர் ஜெயராஜ்
அரசியல் மாற்றங்களினால் ஒரு போதும் பொருட்களின் விலை உயர்வை மாற்ற முடியாது
தனியார் பஸ்களில் மே மாதம் முதல் பயணச்சீட்டு வழங்குவது கட்டாயம்
இந்து இளைஞர் மன்றம் நடத்தும் தென்னிந்திய திருத்தல யாத்திரை
2008 இறுதிவரை சிறிய உற்பத்தித்துறையை ஊக்குவிக்க வர்த்தக சம்மேளனம் உதவும்
மக்கள் அச்சமின்றி வாழும் நிலையை உருவாக்க மிதிவெடி அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுப்பு
இரு மாத காலங்களாக மூடப்பட்டிருந்த கதிர்காமம் - புத்தள வீதியை திறக்க ஏற்பாடு
புதுவருட விசேட பொது வைபவங்களில் ஒலிபெருக்கி பாவனைக்கு பொலிஸ் அனுமதிபெற வேண்டும்
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களம் முஸ்லிம் பிரதேசங்களிலேயே தீவிர பிரசாரம்
அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நாளை தேர்தல் ஆணையாளர் சந்திப்பு
புதுவருட காலத்தை முன்னிட்டு மேலதிக சேவையில் 2000 பஸ்கள்
ஜனாதிபதியினால் கிழக்கு விடுவிக்கப்பட்டதையடுத்தே ஜனநாயக ரீதியிலான தேர்தலை எதிர் கொள்கின்றோம்
சித்திரைப் புத்தாண்டை அறநெறி ஆண்டாகவும் தேசிய சமாதான ஆண்டாகவும் வரவேற்போம்
13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் எந்த மாகாண சபையும் செயற்படவில்லை
மீண்டுமொரு வரலாற்றுத் தவறு தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது
கல்முனை வலய ஆளணியினரின் குழு மேற்பார்வை ஜனநாயக ரீதியில் இடம்பெற வேண்டியது அவசியம்
5 வகையான வேலைத் திட்டங்கள் மூலம் எதிர்காலத்தில் கல்வி கற்ற சமூகம் உருவாகும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com