கடந்த இருமாத காலங்களாக மூடப்பட்டிருந்த கதிர்காமம் - புத்தள வீதியை உடனடியாக திறந்துவிடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நெடுஞ்சாலைகள் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சர் ஜகத்புஷ்பகுமார கடந்த வாரம் கதிர்காமப் பகுதிக்கும் புத்தள கல்கே பகுதிக்கும் விஜயம் செய்து பாதுகாப்பு நிலமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார். இதனையடுத்தே சித்திரை புதுவருடத்துக்கு முன்னர் ஜனாதிபதியின் விருப்பத்துக்கிணங்க இந்த வீதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டள்ளது.
இம்மாதம் 22 ஆம் திகதி வெள்ளாவாயாவில் இந்நிழ்வு நடைபெறவுள்ளது. ஈரான் அரசாங்கத்தின் உதவியோடு இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதால் இந்த வைபவத்தில் அடிக்கல்லை ஈரான் ஜனாதிபதியும், இலங்கை ஜனாதிபதியும் நாட்டி வைப்பார்கள்.
தற்போது வெள்ளவாயாவுக்கூடாக கிழக்கு மாகாணத்தின் காரைதீவு வரையிலான வீதி விஸ்தரிப்புகள் துரிதமாக நடைபெறவுள்ளன.