யாழ் மாவட்டத்தில் 13,569,287 சதுர கிலோமீற்றர் பிரதேசம் மிதிவெடி அபாயமுள்ள பிரதேசமாக உள்ளபோதும், தற்போதைய மதிப்பீட்டின்படி 18,576,319 சதுர மீற்றர் பிரதேசம் மிதிவெடி அபாயமுள்ள பிரதேசமாகக் கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். செயலக மிதிவெடி அகற்றும் பிரிவு தெரிவித்துள்ளது.
மிதிவெடி அகற்றும் ஹலோரஸ்ட் நிறுவனமும் , டெனிஸ் மிதிவெடி அகற்றும் நிறுவனமும் இதுவரை 9,000,368 சதுரமீற்றர் நிலப்பரப்பில் மிதிவெடிகளை அகற்றி மக்கள் அச்சமின்றிக் குடியிருக்கும் காணிகளாக பொதுமக்களிடம் கையளித்துள்ளனர்.
தற்போது 5,922,961 சதுரமீற்றர் நிலப்பரப்பில் மிதிவெடி அகற்றும் பணி முனைப்பாக இடம்பெற்றுவருவதாகவும் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகுதியாகவுள்ள 3,672,960 சதுரமீற்றர் நிலப்பரப்பு இன்னும் மிதிவெடியுள்ள பிரதேசமாகவிருப்பதாகவும் இவை முழுவதும் 2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் அகற்றப்பட்டு குடாநாட்டை மிதிவெடியற்ற பிரதேசமாக்க முடியுமென்று தெரிவித்துள்ளனர்.