கொழும்பு இந்து இளைஞர் மன்றம் வருடாவருடம் நடத்தும் தென்னிந்தியத் திருத்தல யாத்திரை தொடர்ந்து 11 ஆவது வருடமாக இவ்வருடம் மே மாத இறுதியில் நடத்தப்படவுள்ளது.
ஆறுபடைவீடு, சிதம்பரம், சீர்காழி, ஷ்ரீரங்கம், இராமேஸ்வரம், கன்னியாகுமாரி, திருப்பதி, மதுரை மீனாட்சி, திருவண்ணாமலை, திருவேற்காடு, புட்டபர்தி உட்பட சுமார் 30 வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுக்குப் பக்தர்கள் வழமைபோல அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
இலாப நோக்கற்ற முற்று முழுதாக சேவை அடிப்படையில் நடத்தப்படும் இப்புனித யாத்திரையில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களான 0774747382 அல்லது 0777-304078 ஆகியவற்றுடன் தொடர்பு கொண்ட பின்னர் வெள்ளவத்தையிலுள்ள மன்றத்தின் தலைமையகத்தில் தம்மைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.