* தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு
தனியார் பஸ்களில் மோ மாதம், முதலாம் திகதி முதல் பயணச்சீட்டு வழங்குவது கட்டாயமாக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து ஆணைக்குழுவின் தலைவர் அமல் குமாரகே தெரிவித்துள்ளதாவது;
பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது நடைமுறையிலிருந்தாலும் அநேக பஸ்களில் பயணச்சீட்டு வழங்கப்படுவதில்லை. இதுபற்றி பயணிகளும் எமக்கு முறையிட்டுள்ளனர்.
இதையடுத்தே பயணச்சீட்டு வழங்குவது காட்டாயமாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி இது காட்டாய நடைமுறைக்கு வரும். இதனடிப்படையில் சகல தனியார் பஸ்களுக்கும் பயணச்சீட்டு இயந்திரம் வழங்க தீர்மானித்துள்ளோம்.
பயணச்சீட்டு வழங்காத நடத்துநருக்கும், பயணச்சீட்டு வைத்திராத பயணிக்கும் அபராதம் விதிக்கப்படும். நடத்துநருக்கு 250 ரூபாவும், பயணிக்கு 100 ரூபாவும் அபராதம் விதிக்கப்படும். இதற்கேற்ற வகையில் சட்டங்களில் திருத்தமும் மேற்கொள்ளப்படும்.
இப்புதிய நடைமுறைக்கு தனியார் பஸ் தொழிற்சங்கங்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளமையால் புதிய நடைமுறையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தலாமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.