தன்னலம் பாராது அனைத்து இன மக்களுக்காகவும் அரும்பாடுபட்டவர் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே. அவரது இழப்பானது பேரிழப்பாகும் என்று இ.தொ.கா உறுப்பினர் ஏ.எம்.டி.இராஜன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் குறிப்பாக கம்பஹா மாவட்ட சிறுபான்மையின மக்களுக்கும் பேரிழப்பாகும்.
தான் பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில் நேர்மையாகவும் அன்புடனும் பாச உணர்வுடன் பழகிய அவர் துணிச்சல் மிக்கவர்.
உண்மையை எவ்விடத்திலும் தைரியமாக பயமின்றி எடுத்துரைப்பவர். அன்னாரின் இழப்பு என்றும் ஈடு செய்ய முடியாததாகும் .இந்த மிலேச்சத்தனமான செயல் கண்டிக்கத்தக்கதாகும்.
அவரை இழந்து தவிக்கும் உறவினர்கள், நண்பர்கள் , கம்பஹா மாவட்ட மக்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதாகவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.