இன ஒற்றுமைக்காக பாடுபட்டு சமாதான சகவாழ்வை மேம்படுத்த உழைத்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் மறைவானது பேரிழப்பாகும் என்று பிரதியமைச்சர் எம்.எஸ்.செல்லச்சாமி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
துணிச்சலுடன் கருத்துகளை வெளியிடுபவராகவும் திறன் மிக்கவராகவும் மும் மொழியிலும் திறமையாகப் பேசும் ஆற்றல் உடையவராகவும் விளங்கியவர்.
சிறுபான்மை இன மக்களின் உயர்விற்காக பாடுபட்ட அவரது திடீர் மறைவானது இலங்கை அரசியல் வரலாற்றில் மாபெரும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.