Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஒரு மூடை உரத்தை 1500 ரூபாவிற்கு வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கையெடுத்துள்ளது
[07 - April - 2008] [Font Size - A - A - A]
* அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

2008 ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தின்படி 50 ஏக்கர் காணிக்கு குறைவாக விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு எதிர்வரும் மே மாதம் முதல் ஒரு மூடை உரத்தை 1500 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அபிவிருத்தி கமநல சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நுவரெலியா கிறேன்ட் ஹோட்டலில் நடைபெற்ற இருநாள் செயலமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோது இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது;

"நுவரெலியா - பதுளை மாவட்டங்களில் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழி

வகைகள் விதை உருளைக்கிழங்கு இறக்குமதி செய்வதைவிட உள்ளூரில் தரமான விதை உருளைக் கிழங்கு உற்பத்தி செய்தல் சம்பந்தமாக தேவையான ஆலோசனைகளையும் சரியான வழிமுறைகளையும் ஒரு அறிக்கையாக விவசாய சங்க பிரதிகள் தயாரித்து இன்னும் 2 மாத காலத்திற்குள் எனக்கு வழங்க வேண்டும்.

தற்பொழுது இலங்கையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது.

ஆனால், எமது நாட்டிற்கு ஒரு இலட்சத்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் உருளைக்கிழங்கு தேவைப்படுகிறது. இதனாலேயே உருளைக் கிழங்கு இறக்குமதி செய்யப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக் கிழங்கை தடை செய்ய வேண்டுமானால் உள்ளூரில் உருளைக்கிழங்கின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கிற்கு தீர்வு வரியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதியை தடை செய்யலாம். ஆனால், இங்கு உற்பத்தி செய்யப்படும் உருளைக்

கிழங்கை களஞ்சியசாலைகளில் மறைத்து வைக்கக்கூடாது, பாவனையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

கடந்த வருடம் மாத்தளை மாவட்டத்தில் வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நன்மைகருதி வெங்காயம் இறக்குமதி செய்வதை தடை செய்தோம்" என்றார்.

Email this page Your Opinion Print this page
வடக்கு போர்முனையில் வெற்றி பெறும்வரை ஏ-9 வீதி திறக்கப்படாது
பொறுமை காத்து பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்
பசிலின் பாதுகாப்புக்கு சென்ற 2 பாதுகாப்பு அதிகாரிகள் வாகன விபத்தில் உயிரிழப்பு
கிழக்குத்தேர்தலை நீதியாக நடாத்துவதற்காக பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களையுங்கள்
வட பகுதிக்கான போக்குவரத்து இடைநிறுத்தம்
மோசடியான முறையில் தேர்தல் இடம்பெறப்போவதன் வெளிப்பாடே புலிகளின் பெயரில் போலி வேட்பு மனுத்தாக்கல்
கிழக்கு மாகாண சபை தேர்தல் நடக்கும் தினத்திலிருந்து அரசின் வீழ்ச்சி ஆரம்பமாகும்
கத்தோலிக்க பாடசாலைகளில் கத்தோலிக்க பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்
நியூயோர்க்கில் இலங்கை அலுவலகங்கள் முன்பாக சர்வதேச மன்னிப்புச்சபை பேரணி நடத்தும்
தேங்காய் எண்ணெய், மரக்கறி எண்ணெயின் விலை நாற்பது ரூபாவால் குறைப்பு
ஒரு மூடை உரத்தை 1500 ரூபாவிற்கு வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கையெடுத்துள்ளது
ஹக்கீமின் பாதுகாப்பு குறைப்பு வழங்கப்பட்ட வாகனமும் வாபஸ்
மனித உரிமைகளை மேம்படுத்துவதில் தங்கியிருக்கும் இலங்கையின் ஏற்றுமதி
`சமாதானம், சகவாழ்வை ஏற்படுத்த பாடுபட்டவர் அமைச்சர் ஜெயராஜ்'
`சிறந்த தலைமைத்துவத்தையும் பேச்சாற்றலையும் கொண்டவர் அமரர் ஜெயராஜ்'
`தன்னலம் பாராது அனைத்து இன மக்களுக்காகவும் சேவையாற்றியவர்'
மூவின மக்களதும் ஒற்றுமைக்காக குரல் கொடுத்தவர் அமைச்சர் ஜெயராஜ்
அரசியல் மாற்றங்களினால் ஒரு போதும் பொருட்களின் விலை உயர்வை மாற்ற முடியாது
தனியார் பஸ்களில் மே மாதம் முதல் பயணச்சீட்டு வழங்குவது கட்டாயம்
இந்து இளைஞர் மன்றம் நடத்தும் தென்னிந்திய திருத்தல யாத்திரை
2008 இறுதிவரை சிறிய உற்பத்தித்துறையை ஊக்குவிக்க வர்த்தக சம்மேளனம் உதவும்
மக்கள் அச்சமின்றி வாழும் நிலையை உருவாக்க மிதிவெடி அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுப்பு
இரு மாத காலங்களாக மூடப்பட்டிருந்த கதிர்காமம் - புத்தள வீதியை திறக்க ஏற்பாடு
புதுவருட விசேட பொது வைபவங்களில் ஒலிபெருக்கி பாவனைக்கு பொலிஸ் அனுமதிபெற வேண்டும்
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களம் முஸ்லிம் பிரதேசங்களிலேயே தீவிர பிரசாரம்
அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நாளை தேர்தல் ஆணையாளர் சந்திப்பு
புதுவருட காலத்தை முன்னிட்டு மேலதிக சேவையில் 2000 பஸ்கள்
ஜனாதிபதியினால் கிழக்கு விடுவிக்கப்பட்டதையடுத்தே ஜனநாயக ரீதியிலான தேர்தலை எதிர் கொள்கின்றோம்
சித்திரைப் புத்தாண்டை அறநெறி ஆண்டாகவும் தேசிய சமாதான ஆண்டாகவும் வரவேற்போம்
13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் எந்த மாகாண சபையும் செயற்படவில்லை
மீண்டுமொரு வரலாற்றுத் தவறு தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது
கல்முனை வலய ஆளணியினரின் குழு மேற்பார்வை ஜனநாயக ரீதியில் இடம்பெற வேண்டியது அவசியம்
5 வகையான வேலைத் திட்டங்கள் மூலம் எதிர்காலத்தில் கல்வி கற்ற சமூகம் உருவாகும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com