கம்பஹா மிரிஸ்வத்தை சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவின் பாதுகாப்புக்குச் சென்ற ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த (பி.எஸ்.டி.) இருவர் உயிரிழந்துள்ளனர்.
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கொல்லப்பட்டதையடுத்து பசில் ராஜபக்ஷ கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் கம்பஹா ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.
அவரது பாதுகாப்புக்காக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் தரை வழியாக கம்பஹாவிற்குச் சென்ற போதே கொம்பு- கண்டி வீதியில் மிரிஸ்வத்தை சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் கொழும்பு நோக்கி வந்த சீமெந்து கொள்கலனும் மோதுண்டபோதே ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதிலொருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன் மற்றவர் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார்.