Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பொறுமை காத்து பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்
[07 - April - 2008] [Font Size - A - A - A]
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தித்துறை அமைச்சரும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனாதிகாரியுமான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் படுகொலையானது பயங்கரவாதிகளின் மிலேச்சத்தமான நடவடிக்கையென கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மக்களை அமைதி காத்து பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் படுகொலைச் சம்பவத்தையிட்டு ஜனாதிபதி ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

புத்தாண்டை வரவேற்கும் ஆரம்ப நிகழ்வின்போது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மிலேச்சத்தனமாக கொல்லப்பட்டுள்ளார். இது புலிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றொரு குரூரத்தனமான நடவடிக்கையாகும்.

இச்சம்பவத்தில் ஜெயராஜுடன் பலியானோர், காயமடைந்தோர் தொடர்பாக கவலையடைந்துள்ளேன்.அமைச்சர் ஜெயராஜ் இன, மத பேதமின்றி சேவையாற்றிய கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த தலைவராகும். கம்பஹா மாவட்டத்தில் அதிகளவு வாக்குகளைப் பெற்று மக்களுக்கு சேவை செய்தவர் ஆவார். தமது சட்டத்தரணியென்ற தொழிலுக்கு அப்பால் மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றியவர். இந்த படுகொலைச் சம்பவத்தின் மூலம் ஜனநாயகத் தலைவர்களைக் கொலை செய்யும் மிலேச்சத்தனத்தை மீண்டுமொரு முறை புலிகள் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட அரசு திடசங்கற்பம் பூண்டுள்ளது. இதற்கு சகல மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொறுமை காத்து சமாதானத்தை ஏற்படுத்தி ஜனநாயகத்தை நிலை நாட்ட சகலரும் ஆதரவழிக்க வேண்டும்.

Email this page Your Opinion Print this page
வடக்கு போர்முனையில் வெற்றி பெறும்வரை ஏ-9 வீதி திறக்கப்படாது
பொறுமை காத்து பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்
பசிலின் பாதுகாப்புக்கு சென்ற 2 பாதுகாப்பு அதிகாரிகள் வாகன விபத்தில் உயிரிழப்பு
கிழக்குத்தேர்தலை நீதியாக நடாத்துவதற்காக பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களையுங்கள்
வட பகுதிக்கான போக்குவரத்து இடைநிறுத்தம்
மோசடியான முறையில் தேர்தல் இடம்பெறப்போவதன் வெளிப்பாடே புலிகளின் பெயரில் போலி வேட்பு மனுத்தாக்கல்
கிழக்கு மாகாண சபை தேர்தல் நடக்கும் தினத்திலிருந்து அரசின் வீழ்ச்சி ஆரம்பமாகும்
கத்தோலிக்க பாடசாலைகளில் கத்தோலிக்க பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்
நியூயோர்க்கில் இலங்கை அலுவலகங்கள் முன்பாக சர்வதேச மன்னிப்புச்சபை பேரணி நடத்தும்
தேங்காய் எண்ணெய், மரக்கறி எண்ணெயின் விலை நாற்பது ரூபாவால் குறைப்பு
ஒரு மூடை உரத்தை 1500 ரூபாவிற்கு வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கையெடுத்துள்ளது
ஹக்கீமின் பாதுகாப்பு குறைப்பு வழங்கப்பட்ட வாகனமும் வாபஸ்
மனித உரிமைகளை மேம்படுத்துவதில் தங்கியிருக்கும் இலங்கையின் ஏற்றுமதி
`சமாதானம், சகவாழ்வை ஏற்படுத்த பாடுபட்டவர் அமைச்சர் ஜெயராஜ்'
`சிறந்த தலைமைத்துவத்தையும் பேச்சாற்றலையும் கொண்டவர் அமரர் ஜெயராஜ்'
`தன்னலம் பாராது அனைத்து இன மக்களுக்காகவும் சேவையாற்றியவர்'
மூவின மக்களதும் ஒற்றுமைக்காக குரல் கொடுத்தவர் அமைச்சர் ஜெயராஜ்
அரசியல் மாற்றங்களினால் ஒரு போதும் பொருட்களின் விலை உயர்வை மாற்ற முடியாது
தனியார் பஸ்களில் மே மாதம் முதல் பயணச்சீட்டு வழங்குவது கட்டாயம்
இந்து இளைஞர் மன்றம் நடத்தும் தென்னிந்திய திருத்தல யாத்திரை
2008 இறுதிவரை சிறிய உற்பத்தித்துறையை ஊக்குவிக்க வர்த்தக சம்மேளனம் உதவும்
மக்கள் அச்சமின்றி வாழும் நிலையை உருவாக்க மிதிவெடி அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுப்பு
இரு மாத காலங்களாக மூடப்பட்டிருந்த கதிர்காமம் - புத்தள வீதியை திறக்க ஏற்பாடு
புதுவருட விசேட பொது வைபவங்களில் ஒலிபெருக்கி பாவனைக்கு பொலிஸ் அனுமதிபெற வேண்டும்
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களம் முஸ்லிம் பிரதேசங்களிலேயே தீவிர பிரசாரம்
அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நாளை தேர்தல் ஆணையாளர் சந்திப்பு
புதுவருட காலத்தை முன்னிட்டு மேலதிக சேவையில் 2000 பஸ்கள்
ஜனாதிபதியினால் கிழக்கு விடுவிக்கப்பட்டதையடுத்தே ஜனநாயக ரீதியிலான தேர்தலை எதிர் கொள்கின்றோம்
சித்திரைப் புத்தாண்டை அறநெறி ஆண்டாகவும் தேசிய சமாதான ஆண்டாகவும் வரவேற்போம்
13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் எந்த மாகாண சபையும் செயற்படவில்லை
மீண்டுமொரு வரலாற்றுத் தவறு தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது
கல்முனை வலய ஆளணியினரின் குழு மேற்பார்வை ஜனநாயக ரீதியில் இடம்பெற வேண்டியது அவசியம்
5 வகையான வேலைத் திட்டங்கள் மூலம் எதிர்காலத்தில் கல்வி கற்ற சமூகம் உருவாகும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com