மடு நோக்கிய இராணுவ நடவடிக்கையின்போது ஆட்லறி ஷெல் தாக்குதல்களினால் சேதமடைந்துள்ள மடு இருதயநாதர் தேவாலயத்தையும் அங்குள்ள இருதயநாதர் சிலை சேதமடைந்து கைகள் உடைந்த நிலையில் உள்ளதையும் காணலாம்.
கம்பஹா வலிவேரியவில் நேற்றுக் காலை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் உடல் மூடப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதையும் சிதைவடைந்த உடல்களை படையினர் சேகரிப்பதையும் தேடுதல் நடவடிக்கை இடம்பெறுவதையும் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறுவதையும் காணலாம்.
இலங்கை வந்துள்ள பிரித்தானிய பராளுமன்ற உறுப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை புத்தளம் மன்னார்வீதி கோல்டன் முகாமுக்கு வந்து நிலைமைகளை பார்வையிட்டார். பாராளுமன்ற உறுப்பினருடன் புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸிலி பெர்னாண்டோ மீள் குடியேற்ற அமைச்சின் திட்டப் பணிப்பாளர் எம்.என்.பஹ்ரி, வடக்கு முஸ்லிம்களுக்கான செயலக பதில் ஆணையாளர் எம்.மதீன், பொறியியலாளர் ஜிப்ரி ஆகியோரையும் பாராளுமன்ற உறுப்பினர் மக்களுடன் உரையாற்றுவதையும் இங்கு காணலாம்.