Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
2 ஆவது டெஸ்டில் மேற்கிந்திய அணி வெற்றிபெற 252 ஓட்டங்கள் தேவை
[07 - April - 2008] [Font Size - A - A - A]
-ஏ.தேவராஜா-

இலங்கை, மே.இந்தியத் தீவு அணிகளிடையே குயின்ஸ்பாக் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் மே. இந்தியத்தீவு அணி வெற்றி பெறுவதற்கு 252 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டுள்ளது.

2 ஆவது டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் முடிவடையும் போது இலங்கை அணி 2 ஆவது இனிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றது.

இவ் அணி ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன்பின் துடுப்பெடுத்தாடிய திலான் சமரவீரவும் சமிந்தவாஸும் பொறுப்புடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடி இணைப்பாட்டமாக 138 ஓட்டங்களைப் பெற்றனர். சமிந்தவாஸ் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதன்பின் திலான் சமரவீர 125 ஓட்டங்களைப் பெற்றபோது ஆட்டமிழந்தார். இதில் 18 பவுண்டரிகள் அடங்கும்.

இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும் டில்சான் 19 பந்துகளைச் சந்தித்து 4 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கலாக 25 ஒட்டங்களைப் பெற்றார்.

இவர் 1 ஆவது இனிங்ஸிலும் 8 பவுண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சில் ரெயிலர் 52 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் ஹெயில், பவல், எட்வேட், பிராவோ தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

இந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியில் மே.இந்தியத்தீவு அணிக்கே வெற்றி வாய்ப்புக் கூடுதலாக இருக்கின்றது. 1 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்: இலங்கை 1 ஆவது இனிங்ஸில் 278 ஓட்டங்கள், 2 ஆவது இனிங்ஸில் 268 ஓட்டங்கள். மே.இந்தியத்தீவு 1 ஆவது இனிங்ஸில் 294 ஓட்டங்கள்.

Email this page Your Opinion Print this page
2 ஆவது டெஸ்டில் மேற்கிந்திய அணி வெற்றிபெற 252 ஓட்டங்கள் தேவை
கான்பூரில் நடைபெறும் 3 ஆவது டெஸ்டில் இந்திய அணியில் சச்சின் இல்லை
அக்தர் மேன்முறையீடு செய்தார் விசாரிக்க சுதந்திரமான குழு
ஐ.பி.எல். போட்டிகளில் ஊடகங்களுக்கு பலத்த கட்டுப்பாடு நீக்காவிட்டால் புறக்கணிக்குமாறு கோரிக்கை
சரிவிலிருந்து அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீறுகொண்டு எழும்
ஐ.சி.சி.யின் புதிய தலைமைச் செயலதிகாரியாக தென்னாபிரிக்காவின் லார்கட் நியமனம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com