கொட்டாஞ்சேனையில் ஒரு தமிழ்ப் பெண்மணி தனது சின்னஞ்சிறிய மகளுடன் வீதியில் சென்று கொண்டிருந்தார். அங்கு அவர் தனக்குப் பரிச்சயமான ஒரு பெண்மணியைக் கண்டதும் வீதியில் நின்று கொண்டே மும்முரமாக உரையாடலில் ஈடுபட்டார்.
அந்தநேரத்தில் சிறுமி திடீரென வீதிக்குக் குறுக்கே ஓடினார்.
தாய் இதைக் காணவேயில்லை. எதிரும் புதிருமாக வந்து கொண்டிருந்த இரண்டு முச்சக்கரவண்டிகள் திடீரென `பிரேக்' போட்டு நிறுத்தப்பட்டதால் அந்தச் சிறுமி விபத்திலிருந்து தப்பினார்.
மெய்மறந்து உரையாடலில் ஈடுபட்டிருந்த பெண்மணிகள் அப்போதுதான் திடுக்குற்று பிள்ளையை ஓடிச்சென்று பிடித்தனர். தாய்க்கு அங்கு நின்றவர்களின் ஏச்சு நன்றாகக் கிடைத்தது.
சிறுவர்களை வீதியில் அழைத்துச் செல்லும் பெண்கள் அங்கு நின்று வம்பளக்கும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க இது ஒரு பாடமாக இருக்க வேண்டும்.