Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இன்று திருமலையில் ஷ்ரீ சண்முகா மாணவிகளுக்கு பாராட்டு விழா; ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு
[09 - April - 2008] [Font Size - A - A - A]
அண்மையில் வெளியான க.பொ.த சா/த பெறுபேறுகளின்படி, அகில இலங்கை ரீதியில் 5 ஆவது இடத்தையும் திருகோணமலை மாவட்டத்தில் 1 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்ட திருகோணமலை ஷ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியின் மாணவிகளைப் பாராட்டும் மற்றும் அவர்களைக் கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு திருகோணமலை பகவான் ஷ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தினால் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 9) மாலை திருகோணமலை சாயீஸ்வரம் மண்டபத்தில் நடத்தப்படும் க.பொ.த. சா/த) பரீட்சையில் விசேட சித்திகளைப் பெற்ற மாணவிகள், கற்பித்த ஆசிரியர்கள் ஆகியோரின் எதிர்கால நன்மைக்காக விசேட பிரார்த்தனையும் இந்நிகழ்வில் இடம்பெறும்.

இம்முறை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியிலிருந்து தோற்றிய மாணவிகளில் 12 பேர் 10ஏ, ஒன்பது பேர் 9ஏ, எட்டுபேர் 8ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பாராட்டு, கௌரவிப்பு, பிரார்த்தனை நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.தியாகலிங்கம், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், கிழக்கு மாகாணச் சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி என்.ஆர்.ரஞ்சினி ஆகியோர் பாராட்டுரைகளை நிகழ்த்துவர். தீபம், பஜனையுடன் ஆரம்பமாகும் இந்நிகழ்வில் திருமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் ஆதினகர்த்தா `வேதாகமமாமணி' பிரம்மஷ்ரீ சோ.இரவிச்சந்திரக்குருக்கள் ஆசியுரை வழங்குவார். தலைமையுரை ஆ.சிவலிங்கம் (தலைவர், பகவான் ஷ்ரீசத்திய சாயி சேவாநிலையம்) வரவேற்புரை நா.புகேந்திரன் (தலைவர், வடமத்திய பிராந்திய ஷ்ரீ சத்திய சாயி சேவா நிலையங்களின் இணைப்புக்குழு), சிறப்புரை ஷ்ரீசண்முக இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி சந்திரா பாலசுப்பிரமணியம்.

Email this page Your Opinion Print this page
கிழக்கு தேர்தலின் பின் என்னை வெளியேற்ற கட்சி தீர்மானம் சூழ்ச்சிகளுக்கு அடிபணியேன்; தாயகத்திற்காக போராடுவேன்
வீரவன்ச தலைமையில் 11 எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தனித்து இயங்க முடிவு
தம்மிக கித்துல்கொட நியமன விவகாரம் பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி
11 ஜே.வி.பி எம்.பி.களுக்கும் எதிராக சட்டநடவடிக்கை
அரசியலமைப்புக்குட்பட்டதே கித்துல்கொடவின் நியமனம் சபாநாயகர் அறிவிப்பு; ஒத்துழைக்கமாட்டோம் என்கிறார் ரணில்
ஜெயராஜ் படுகொலை தொடர்பாக 75 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
இயற்கை அனர்த்தத்தை தவிர எக்காரணம் கொண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படாது; ஆணையாளர் தெரிவிப்பு
வாழைச்சேனையில் இளைஞன் குத்திக்கொலை
உடப்பில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
படுகொலை சம்பவம் தொடர்பாக மேலதிக விபரத்தை அன்றிரவு நான் அறிந்திருக்கவில்லை
`மும்மொழி பேசும் ஆற்றல் மிக்க அரசியல் தலைவர் அமரர் ஜெயராஜ்'
இடி, மின்னல் தாக்குதலால் இறப்பவர்கள் தொகை அடுத்த மாதம் அதிகரிக்கலாம்
அமைச்சரின் மறைவினால் கட்டானயில் பாதுகாப்பு
பேச்சுவார்த்தை மூலம் வன்முறையை அகற்றும்வரை ஜனநாயக அரசியல் செயற்பாடுகள் உருவாகாது
வவுனியா ஆஸ்பத்திரியில் 4 புலிகளின் சடலங்கள்
பாராளுமன்றத்தில் ஜெயராஜுக்கு அனுதாபம்
மலையகத்தின் பல்வேறு தொழிற்சங்கங்கள் மேதின நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு
சுதந்திரக் கட்சிக்கு பாரிய இழப்பு
புகைப்பிடித்தலால் வருடாந்தம் 23 ஆயிரம் பேர் மரணம்
யாழ்.குடா நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை
கிழக்குத் தேர்தலில் 1,072 வாக்குச்சாவடிகள்
அநுராதபுரம் வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு
`நான் பொய்ச்சாட்சியம் வழங்க வரவில்லை நடந்த உண்மைகளை கூறவே வந்தேன்'
நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை கண்டித்து கிறேக் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
குமுதினி படகுச்சேவை மீண்டும் இடைநிறுத்தம்
தற்கொலைத் தாக்குதலில் பலியானோர் காயமடைந்தோர் குடும்பங்களுக்கு நஷ்டஈடு
இலங்கை அகதிகளுடன் சென்ற 2 ஈரானியரிடம் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணை
வெள்ளைவான் ஆயுதபாணிகளால் குடும்பஸ்தர் கடத்தப்பட்டார்
அடிப்படை வசதிகளைவிட கல்வி வசதிகளை அபிவிருத்தி செய்வதில் முன்னிற்க வேண்டும்
யாழ்.குடாநாட்டில் மீண்டும் பாதீனியம் செடி பரவும் அபாயம்
கறிற்றாஸ் ஏற்பாட்டில் 45 உளவள பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்
இன்று திருமலையில் ஷ்ரீ சண்முகா மாணவிகளுக்கு பாராட்டு விழா; ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com