Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கறிற்றாஸ் ஏற்பாட்டில் 45 உளவள பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்
[09 - April - 2008] [Font Size - A - A - A]
திருகோணமலை மாவட்ட எஹெட் கறிற்றாஸ் அமைப்பின் சுகாதார உளவள சமூக அலகின் ஏற்பாட்டில் ஒரு வருட கால உளவளத்துறைப் பயிற்சிநெறியை நிறைவு செய்து கொண்ட 45 உளவளப் பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருகோணமலை சென்.மேரிஸ் பெண்கள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. செடக் எஹெட் கறிற்றாஸ் தேசியப் பணிப்பாளர் வண. பிதா டேமியன் பெர்னாண்டோ பிரதம அதிதியாக நிகழ்வில் கலந்து கொண்டார்.

திருமலை மாவட்ட எஹெட் கறிற்றாஸ் பணிப்பாளர் வண.பிதா எப்.எக்ஸ். டயஸ் தலைமை வகித்தார். வண.பிதா டயஸ் பேசும்போது; `கடற்கோள் அழிவிற்குப் பின்னர்தான் உளவியல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உளவள சமூக மேம்பாடு பற்றிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அனைத்து நிறுவனங்களும் முழுமையாகச் சிந்திக்கத் தொடங்கின. ஆனால், எஹெட் கறிற்றாஸ் அமைப்பு, கடற்கோள் ஏற்படுவதற்கு முன்பே உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது" என்று கூறினார்.

செடெக் எஹெட் கறிற்றாஸ் தேசியப் பணிப்பாளர் வண.பிதா டேமியன் பெர்னாண்டோ பேசும்போது;

"உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்புடன் உளவியல் மேம்பாட்டுக்கு உதவ வேண்டும்" என்று கூறினார். செடக் எஹெட் கறிற்றாஸ் அமைப்பின் கடற்கோள் செயற்றிட்ட முகாமையாளர் தேவேந்திரராஜா பேசும்போது; உடைந்து போன பொருட்களை ஏதாவது ஒரு விதத்தில் சரி செய்யலாம். ஆனால், உடைந்து போன உள்ளங்களை கட்டி எழுப்புவது கடினமானதாகும். அதற்கென தனியான பயிற்சி உளநலப் பணியாளர்களுக்குத் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டார். செடக் எஹெட் கறிற்றாஸ் தேசிய உளவள ஒருங்கிணைப்பாளர் அருட் சகோதரி பாத்திமாநாயகி பேசும்போது; அன்பு மற்றும் உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படும் மனிதாபிமான சேவைக்கு வாழும் உள்ளங்கள் அழியாச் சின்னங்களாக அமைகின்றன என்றார். மாகாண சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் து.தவக்கொடிராஜா, உளவளப் பயிற்சி நெறியை நடத்திய மனநல வைத்திய நிபுணர் டாக்டர் ரி.கடம்பநாதன் ஆகியோரும் பேசினர். திட்ட முகாமையாளர் ஜி.ஏ.பிரான்ஸிஸ் நன்றி கூறினார்.

Email this page Your Opinion Print this page
கிழக்கு தேர்தலின் பின் என்னை வெளியேற்ற கட்சி தீர்மானம் சூழ்ச்சிகளுக்கு அடிபணியேன்; தாயகத்திற்காக போராடுவேன்
வீரவன்ச தலைமையில் 11 எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தனித்து இயங்க முடிவு
தம்மிக கித்துல்கொட நியமன விவகாரம் பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி
11 ஜே.வி.பி எம்.பி.களுக்கும் எதிராக சட்டநடவடிக்கை
அரசியலமைப்புக்குட்பட்டதே கித்துல்கொடவின் நியமனம் சபாநாயகர் அறிவிப்பு; ஒத்துழைக்கமாட்டோம் என்கிறார் ரணில்
ஜெயராஜ் படுகொலை தொடர்பாக 75 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
இயற்கை அனர்த்தத்தை தவிர எக்காரணம் கொண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படாது; ஆணையாளர் தெரிவிப்பு
வாழைச்சேனையில் இளைஞன் குத்திக்கொலை
உடப்பில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
படுகொலை சம்பவம் தொடர்பாக மேலதிக விபரத்தை அன்றிரவு நான் அறிந்திருக்கவில்லை
`மும்மொழி பேசும் ஆற்றல் மிக்க அரசியல் தலைவர் அமரர் ஜெயராஜ்'
இடி, மின்னல் தாக்குதலால் இறப்பவர்கள் தொகை அடுத்த மாதம் அதிகரிக்கலாம்
அமைச்சரின் மறைவினால் கட்டானயில் பாதுகாப்பு
பேச்சுவார்த்தை மூலம் வன்முறையை அகற்றும்வரை ஜனநாயக அரசியல் செயற்பாடுகள் உருவாகாது
வவுனியா ஆஸ்பத்திரியில் 4 புலிகளின் சடலங்கள்
பாராளுமன்றத்தில் ஜெயராஜுக்கு அனுதாபம்
மலையகத்தின் பல்வேறு தொழிற்சங்கங்கள் மேதின நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு
சுதந்திரக் கட்சிக்கு பாரிய இழப்பு
புகைப்பிடித்தலால் வருடாந்தம் 23 ஆயிரம் பேர் மரணம்
யாழ்.குடா நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை
கிழக்குத் தேர்தலில் 1,072 வாக்குச்சாவடிகள்
அநுராதபுரம் வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு
`நான் பொய்ச்சாட்சியம் வழங்க வரவில்லை நடந்த உண்மைகளை கூறவே வந்தேன்'
நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை கண்டித்து கிறேக் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
குமுதினி படகுச்சேவை மீண்டும் இடைநிறுத்தம்
தற்கொலைத் தாக்குதலில் பலியானோர் காயமடைந்தோர் குடும்பங்களுக்கு நஷ்டஈடு
இலங்கை அகதிகளுடன் சென்ற 2 ஈரானியரிடம் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணை
வெள்ளைவான் ஆயுதபாணிகளால் குடும்பஸ்தர் கடத்தப்பட்டார்
அடிப்படை வசதிகளைவிட கல்வி வசதிகளை அபிவிருத்தி செய்வதில் முன்னிற்க வேண்டும்
யாழ்.குடாநாட்டில் மீண்டும் பாதீனியம் செடி பரவும் அபாயம்
கறிற்றாஸ் ஏற்பாட்டில் 45 உளவள பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்
இன்று திருமலையில் ஷ்ரீ சண்முகா மாணவிகளுக்கு பாராட்டு விழா; ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com