முந்தல் பரலங்கட்டு பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை வெள்ளை வானில் வந்த ஆயுதபாணிகளால் குடும்பஸ்தர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இரு பிள்ளைகளின் தந்தையான எம்.ஏ.பீற்றர் வில்பிரட் (59 வயது) என்ற விவசாயியே கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இவர் வீட்டிலிருந்த போது அங்கு வெள்ளை வானில் வந்த நான்கு ஆயுதபாணிகள் இவரைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாக குடும்பத்தவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.