இலங்கையிலிருந்து அகதிகளுடன் இராமேஸ்வரம் அரிச்சல்முனைக்கு படகில் சென்ற ஈரான் நாட்டைச்சேர்ந்த இருவரை தமிழ்நாடு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசாரணையின்போது ஈரானைச் சேர்ந்தவர்கள் விடுதலைப் புலிகள் ஆதரவாளராக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஜாபீர் என்பவர் இருதய நோயால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அஜிசுல்லா குஸ் நஜினுக்கு இடுப்பு கீழ்ப்பகுதி செயல் இழந்ததால் வீல்சேரில் அவரது வாழ்க்கை நடந்து வருகிறது. இவரது உதவியாளர்தான் ஜாபீர்.
மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரி இவர்களிடம் விசாரணை நடத்தினர். பொலிஸார் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதில் கூறவில்லை.
ஜாபிருக்கு ஈரான் நாட்டில் பேசும் பெர்சி மொழி தவிர வேறு மொழி தெரியாது. இதைத்தொடர்ந்து பெர்சி மொழி ஓரளவு அறிந்த இன்ஸ்பெக்டர் ஆலம் விமானத்தில் மதுரை அழைத்து வரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.