Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை கண்டித்து கிறேக் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
[09 - April - 2008] [Font Size - A - A - A]
பண்டாரவளையைச் சேர்ந்த கிறேக் பெருந் தோட்டத் தொழிலாளர்கள் சுமார் 600 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளர்களுக்குரிய ஊக்குவிப்புக் கொடுப்பனவு தொழிலாளர்களின் சம்பளத்துடன் சேர்க்கப்படாமையும், தேயிலைக் கொழுந்துகளை பறித்து போடும் தேயிலைக் கூடைகளுக்கு 250 ரூபா என்றஅடிப்படையில் தொழிலாளர்களின் சம்பளத்தில் கழிக்கப்பட்டதையும் ஆட் சேபித்தே, மேற்படித் தோட்டத் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தோட்டதிற்குள் பொலிஸார் அழைக்கப்பட்டிருந்தமையையும் தொழிலாளர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

எமக்கு ஏற்பட்டிருக்கும் தொழில் ரீதியிலான பிணக்குகளுக்கும் பொலிஸாரை தோட்டத்திற்குள் அழைக்கப் படுவதானது, தோட்ட நிருவாகத்தின் அடாவடித்தனத்தை வெளிப்படுத்துகின்றது.

இது போன்ற செயல்பாடுகளையும் ஆட்சேபிக்கின்றோமென்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு, தொழிலாளர்களுக்குரிய சம்பளம் நேற்றுக் காலை வழங்கப்படும் போதே ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் சம்பளத்துடன் சேர்க்கப்படாமையும் தேயிலைக் கொழுந்து கூடைகளுக்கு 250 ரூபா கழிக்கப்பட்டமையும் தொழிலாளர்களுக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்தே அவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட நிருவாகத்தின் இச்செயல்பாடுகளைக் கண்டித்து தொழிலாளர்கள் தமது சம்பளத்தைப் பெறுவதையும் நிறுத்தியுள்ளனர். வேலை நிறுத்தமும் தொடர்கிறது.

இவ்வேலை நிறுத்தம் குறித்து, ஊவா மாகாண சபைஉறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் மாகணப் பொறுப்பாளருமான அ.அரவிந்குமார், கிறேக் பெருந்தோட்ட முகாமையாளர் சீவலிமுதனாயக்காவுடன் தொடர்பு கொடுண்டுள்ளார்.

உடனடியாக இப் பிணக்கை தம்மால் தீர்க்க முடியாது என்று தோட்டக் கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியே தீர்வினை எற்படுத்த வேண்டுமென்றும், தோட்ட முகாமையாளர் தெரிவித்தார்.

இதையடுத்து, மலையக மக்கள் முன்னணியின் தொழிலுறவு அதிகாரி பி.எஸ். தயானந்த பதுளை உதவித் தெரிவிக்கின்ற ஆணையாளரும் தொடர்பு கொண்டுள்ளார்.

Email this page Your Opinion Print this page
கிழக்கு தேர்தலின் பின் என்னை வெளியேற்ற கட்சி தீர்மானம் சூழ்ச்சிகளுக்கு அடிபணியேன்; தாயகத்திற்காக போராடுவேன்
வீரவன்ச தலைமையில் 11 எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தனித்து இயங்க முடிவு
தம்மிக கித்துல்கொட நியமன விவகாரம் பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி
11 ஜே.வி.பி எம்.பி.களுக்கும் எதிராக சட்டநடவடிக்கை
அரசியலமைப்புக்குட்பட்டதே கித்துல்கொடவின் நியமனம் சபாநாயகர் அறிவிப்பு; ஒத்துழைக்கமாட்டோம் என்கிறார் ரணில்
ஜெயராஜ் படுகொலை தொடர்பாக 75 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
இயற்கை அனர்த்தத்தை தவிர எக்காரணம் கொண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படாது; ஆணையாளர் தெரிவிப்பு
வாழைச்சேனையில் இளைஞன் குத்திக்கொலை
உடப்பில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
படுகொலை சம்பவம் தொடர்பாக மேலதிக விபரத்தை அன்றிரவு நான் அறிந்திருக்கவில்லை
`மும்மொழி பேசும் ஆற்றல் மிக்க அரசியல் தலைவர் அமரர் ஜெயராஜ்'
இடி, மின்னல் தாக்குதலால் இறப்பவர்கள் தொகை அடுத்த மாதம் அதிகரிக்கலாம்
அமைச்சரின் மறைவினால் கட்டானயில் பாதுகாப்பு
பேச்சுவார்த்தை மூலம் வன்முறையை அகற்றும்வரை ஜனநாயக அரசியல் செயற்பாடுகள் உருவாகாது
வவுனியா ஆஸ்பத்திரியில் 4 புலிகளின் சடலங்கள்
பாராளுமன்றத்தில் ஜெயராஜுக்கு அனுதாபம்
மலையகத்தின் பல்வேறு தொழிற்சங்கங்கள் மேதின நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு
சுதந்திரக் கட்சிக்கு பாரிய இழப்பு
புகைப்பிடித்தலால் வருடாந்தம் 23 ஆயிரம் பேர் மரணம்
யாழ்.குடா நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை
கிழக்குத் தேர்தலில் 1,072 வாக்குச்சாவடிகள்
அநுராதபுரம் வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு
`நான் பொய்ச்சாட்சியம் வழங்க வரவில்லை நடந்த உண்மைகளை கூறவே வந்தேன்'
நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை கண்டித்து கிறேக் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
குமுதினி படகுச்சேவை மீண்டும் இடைநிறுத்தம்
தற்கொலைத் தாக்குதலில் பலியானோர் காயமடைந்தோர் குடும்பங்களுக்கு நஷ்டஈடு
இலங்கை அகதிகளுடன் சென்ற 2 ஈரானியரிடம் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணை
வெள்ளைவான் ஆயுதபாணிகளால் குடும்பஸ்தர் கடத்தப்பட்டார்
அடிப்படை வசதிகளைவிட கல்வி வசதிகளை அபிவிருத்தி செய்வதில் முன்னிற்க வேண்டும்
யாழ்.குடாநாட்டில் மீண்டும் பாதீனியம் செடி பரவும் அபாயம்
கறிற்றாஸ் ஏற்பாட்டில் 45 உளவள பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்
இன்று திருமலையில் ஷ்ரீ சண்முகா மாணவிகளுக்கு பாராட்டு விழா; ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com