அநுராதபுரம் உதய மாவத்தையிலுள்ள புளிய மரச் சந்தியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
அநுராதபுரம் நீராவியைச் சேர்ந்த எம்.யாக்கூப் (வயது 47) என்பவரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில் எதிரே வந்த வான் ஒன்றில் மோதி படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்ன மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவினர் நடத்தி வருகின்றனர்.