கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மே மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 1,072 வாக்குச்சாவடிகள் நிறுவப்படவுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 362 வாக்குச்சாவடிகளும் அம்பாறை மாவட்டத்தில் 430 வாக்குச்சாவடிகளும் திருகோணமலையில் 280 வாக்குச்சாவடிகளும் நிறுவப்படவுள்ளன.
இத்தேர்தலில் மூன்று மாவட்டங்களிலிருந்தும் 35 உறுப்பினர்களையும் போனஸ் மூலம் 2 உறுப்பினர்களையும் உள்ளடக்கி 37 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 1,316 பேர் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 37 உறுப்பினர்களையும் தெரிவுசெய்வதற்காக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து மொத்தமாக 9 இலட்சத்து 82 ஆயிரத்து 721 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.