இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை யாழ்மாவட்டத்தில் படித்துவிட்டு வேலையற்றிருக்கும் ஆண்பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் திருத்தும் பயிற்சி, கட்டிட நிர்மாணப்பயிற்சி, வீட்டு மின் இணைப்பு, அலுமினியம் பொருந்துகை ஆகியதுறைகளில் தொழிற் பயிற்சி வழங்கவுள்ளது.
உடுவில் தொழில்பயிற்சி நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருத்தும் பயிற்சியும், யாழ்ப்பாண தொழிற்பயிற்சி நிலையத்தில் வீட்டு மின்னிணைப்பு பயிற்சியும், கோப்பாய் தொழில் பயிற்சி நிலையத்தில் கட்டிட நிர்மாணப் பயிற்சியும், சண்டிலிப்பாய் தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுமினியப் பொருத்துகை தொழிற்பயிற்சியும் வழங்கப்படவுள்ளன.
இப்பயிற்சி நெறியில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் தமது விண்ணப்பங்களை இம்மாதம் பதினைந்தாம் திகதிக்கு முன் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை, 103 ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு நேரிலோ தபால் மூலமோ அனுப்பிவைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.