ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோட்டையாக விளங்கும் கம்பஹா மாவட்டம் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை குறுகிய காலத்தில் இழந்துள்ளது.
முன்னாள் அமைச்சர்களான ஸ்ரீபதி சூரியாராச்சி, அனுர பண்டார நாயக்கவுடன் தற்போது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயையும் இந்த மாவட்டம் இழந்துள்ளது.
இம்மூவரும் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவு வா க்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். மக்கள் மத்தியில் இவர்களுக்கு செல்வாக்கும் அதிகரித்து காணப்பட்டது.
இம்மூவரின் இழப்புகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர் காலத்தில் பெரும் சவாலாக அமைந்துள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்களின் இழப்பை எவ்வாறு சுதந்திரக் கட்சி ஈடு செய்யப் போகிறது என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.