ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேக்கு பாராளுமன்றம் தனது அனுதாபங்களை தெரிவித்தது.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் கூடிய போது சபாநாயகர் சபையின் சார்பில் அனுதாபம் தெரிவித்தார்.
ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் ஜெயராஜின் இழப்பு எனக்கு மிகப்பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு இச்சபையின் உறுப்பினர்கள் சார்பில் எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன்.
இச்சபையின் அனுதாபங்கள் ஜெயராஜின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்படும். மிகவிரைவில் அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் அனுதாபப் பிரேரணை சபையில் எடுத்துக் கொள்ளப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.