வவுனியா ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை விடுதலைப் புலிகளின் நான்கு சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வவுனியா முன்னரங்க காவல் நிலைப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் உயிரிழந்த நான்கு புலிகளின் உடல்களே இவையெனத் தெரிவிக்கப்பட்டது.
ஆஸ்பத்திரிக்குச் சென்ற மாவட்ட பதில் நீதிபதி எம்.சிற்றம்பலம் மரண விசாரணையை நடத்தியதுடன், பிரேத பரிசோதனையின் பின் விடுதலைப் புலிகள் உரிமைகோரும் பட்சத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக வன்னிக்கு உடல்களை அனுப்புமாறும் பணித்தார்.