Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பேச்சுவார்த்தை மூலம் வன்முறையை அகற்றும்வரை ஜனநாயக அரசியல் செயற்பாடுகள் உருவாகாது
[09 - April - 2008] [Font Size - A - A - A]
* அங்கிலிக்கன் ஆயர் டுலிப் டி சிக்கேரா

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மற்றும் மெய்வல்லுநர்கள், தேசிய மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் லக்ஸ்மன் டீ சில்வா மற்றும் சில பாதுகாப்புப் படையினர் ஆகியோரின் படுமோசமான கொலை எதுவித பாரபட்சமுமின்றி தனிநலன் கருதாமல் உயர்ந்த மனதுள் மக்களால் கண்டிக்கப்படவேண்டும் என அங்கிலிக்கன் திருச்சபையின் கொழும்பு ஆயர் அதி.வண.டுலிப் டி சிக்கேரா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக திட்டமிடப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சி சமூகத்தை பயங்கரமாகச் சிதறடிக்கும் முறையில் முடிவடைந்துள்ளது.

பாதிக்கப்பட்ட யாவருக்கும் எமது திரு அவையின் ஆழ்ந்த அனுதாபங்களையும் கூட்டொருமையும் தெரிவிக்கின்றேன். துயருறும் பெற்றோர், துணைவர்கள், பிள்ளைகள், அனைவருக்கும் எமது மன்றாடல்களை எமது திரு அவை உறுதி செய்கிறது. ஆறுதலளிக்கும் கடவுள் உங்கள் உடைந்த நிலையைக் குணப் படுத்தி அமைதியால் உங்களை நிரப்பட்டும்.

இது விடுதலைப் புலிகளின் செயல் போல் தோன்றுகின்றது. இது டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் இளம் பாடசாலை விளையாட்டு வீரர்கள் அநேகர் கொலை செய்யப்பட்ட கோட்டை புகையிரத நிலைய குண்டு வெடிப்பிற்கு ஒத்ததாக உள்ளது. எங்காகிலும் குற்றமில்லாதவரின் படுகொலைகள் நியாயமான எந்த நோக்கத்திற்கும் நன்மை கிடைக்காது. அத்துடன் இலங்கையர்களின் பெருந்தன்மை. அமைதிக்கான எந்த செயல்பாலனங்களிலும் இதற்கு இடமில்லை.

இப்படியான வன்முறையைத் தூண்டும் செயல்கள் பயம், சந்தேகம், கோபம் இவற்றைப் பரப்புகின்றது. அவை எமது சமூகங்களிற்கிடையிலான பிளவை மேலும் அதிகரிக்கச் செய்து அமைதி உரையாடல்களுக்கு இருந்த தருணங்களை இல்லாமல் அகற்றிவிடும்.

ஆனால் அநேக வேளையில் வன்முறை மனுக்கல் நெருக்கடிகளின் அருவருப்பான மெய்யியல்புகளை எதிர்நோக்க வைத்து எமது உட்சிக்கல் நிறைந்த நெருக்கடியை சாத்வீக அடிப்படையில் செயல்படுத்துவதற்கான முடிவை எடுக்க எம்மைப் பலப்படுத்தும். இந்த இரண்டாவது விருப்பத் தேர்வை நாம் எமது தேசமாக உறுதியுடன் தைரியமாக வலியுறுத்த தவறிவிட்டோம் என்பது மிகவும் கவலை தரும் விடயம்.

இப்போதாவது அமைதி விரும்பும் எமது அன்பான நாட்டின் மக்கள் ஒரே குரலில் பேசி நேருக்கு நேர் மோதும் வன்முறையை உரையாடல், பேச்சுவார்த்தைக்கூடாக அகற்றுவோம். இது நிறைவேற்றப்படும் வரை அமைதி அபிவிருத்திக்கான ஜனநாயக அரசியல் செயல்பாடுகள் ஒரு போதும் பொருளியல் நிறைந்த சமூகத்தை உருவாக்காது.

Email this page Your Opinion Print this page
கிழக்கு தேர்தலின் பின் என்னை வெளியேற்ற கட்சி தீர்மானம் சூழ்ச்சிகளுக்கு அடிபணியேன்; தாயகத்திற்காக போராடுவேன்
வீரவன்ச தலைமையில் 11 எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தனித்து இயங்க முடிவு
தம்மிக கித்துல்கொட நியமன விவகாரம் பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி
11 ஜே.வி.பி எம்.பி.களுக்கும் எதிராக சட்டநடவடிக்கை
அரசியலமைப்புக்குட்பட்டதே கித்துல்கொடவின் நியமனம் சபாநாயகர் அறிவிப்பு; ஒத்துழைக்கமாட்டோம் என்கிறார் ரணில்
ஜெயராஜ் படுகொலை தொடர்பாக 75 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
இயற்கை அனர்த்தத்தை தவிர எக்காரணம் கொண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படாது; ஆணையாளர் தெரிவிப்பு
வாழைச்சேனையில் இளைஞன் குத்திக்கொலை
உடப்பில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
படுகொலை சம்பவம் தொடர்பாக மேலதிக விபரத்தை அன்றிரவு நான் அறிந்திருக்கவில்லை
`மும்மொழி பேசும் ஆற்றல் மிக்க அரசியல் தலைவர் அமரர் ஜெயராஜ்'
இடி, மின்னல் தாக்குதலால் இறப்பவர்கள் தொகை அடுத்த மாதம் அதிகரிக்கலாம்
அமைச்சரின் மறைவினால் கட்டானயில் பாதுகாப்பு
பேச்சுவார்த்தை மூலம் வன்முறையை அகற்றும்வரை ஜனநாயக அரசியல் செயற்பாடுகள் உருவாகாது
வவுனியா ஆஸ்பத்திரியில் 4 புலிகளின் சடலங்கள்
பாராளுமன்றத்தில் ஜெயராஜுக்கு அனுதாபம்
மலையகத்தின் பல்வேறு தொழிற்சங்கங்கள் மேதின நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு
சுதந்திரக் கட்சிக்கு பாரிய இழப்பு
புகைப்பிடித்தலால் வருடாந்தம் 23 ஆயிரம் பேர் மரணம்
யாழ்.குடா நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை
கிழக்குத் தேர்தலில் 1,072 வாக்குச்சாவடிகள்
அநுராதபுரம் வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு
`நான் பொய்ச்சாட்சியம் வழங்க வரவில்லை நடந்த உண்மைகளை கூறவே வந்தேன்'
நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை கண்டித்து கிறேக் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
குமுதினி படகுச்சேவை மீண்டும் இடைநிறுத்தம்
தற்கொலைத் தாக்குதலில் பலியானோர் காயமடைந்தோர் குடும்பங்களுக்கு நஷ்டஈடு
இலங்கை அகதிகளுடன் சென்ற 2 ஈரானியரிடம் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணை
வெள்ளைவான் ஆயுதபாணிகளால் குடும்பஸ்தர் கடத்தப்பட்டார்
அடிப்படை வசதிகளைவிட கல்வி வசதிகளை அபிவிருத்தி செய்வதில் முன்னிற்க வேண்டும்
யாழ்.குடாநாட்டில் மீண்டும் பாதீனியம் செடி பரவும் அபாயம்
கறிற்றாஸ் ஏற்பாட்டில் 45 உளவள பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்
இன்று திருமலையில் ஷ்ரீ சண்முகா மாணவிகளுக்கு பாராட்டு விழா; ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com