மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் கட்டான இல்லத்துக்கு செல்பவர்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
நீர்கொழும்பு - கட்டான பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முப்படையினரும் இரவு பகலாக மாறி மாறி பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு- நீர்கொழும்பு பிரதான வீதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தி வைக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரியவர்கள், சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவதையும் காண முடிகிறது.
மறைந்த அமைச்சருக்கு அஞ்சலி செலுத்துவதற்கே பல்வேறு தரப்பினரும் வருகை தருவதால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இப்பிரதேசங்களில் மறைந்த அமைச்சருக்கு அஞ்சலி செலுத்தும் பதாகைகளும் கட்டப்பட்டுள்ளதுடன், வெள்ளைக் கொடிகளும் பறக்க விடப்பட்டுள்ளன.