இடி, மின்னல் தாக்குதல்களால் இறப்பவர்கள், பாதிக்கப்படுபவர்களின் தொகை எதிர் வரும் மே , அக்டோபர் , நவம்பர் மாதங்களில் அதிகரிக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இடி, மின்னல் தாக்குதல்கள் காரணமாக 36 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேர் பெண்களாவர்.
2006 ஆம் ஆண்டு ஆறு பேரும் 2005 ஆம் ஆண்டு 13 பேரும் இடி, மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளனர்.
2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையான இரண்டு வருட காலத்தில் இடி, மின்னல் தாக்கி 261 பேர் பாதிக்கப்பட்டனர்.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையுமான மூன்று மாத காலப்பகுதியில் 12 பேர் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
கையடக்கத் தொலைபேசி பாவனையை இடி, மின்னல் நேரங்களில் தவிர்த்துக்கொள்ளுமாறும் குறிப்பாக அவற்றை இயங்காமல் நிறுத்தி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடி, மின்னல் தென்னை , பனை போன்ற உயரமான மரங்களைத் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளதால் இந்த மரங்களுக்குக் கீழ் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின் உபகரணங்களைப் பயன் படுத்துவதை முற்றாகத் தவிர்க்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.