முந்தல் உடப்பு பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
உடப்பு ஆண்டிமுனைப் பகுதியிலேயே நேற்று அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதிகாலை இவரது வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த மூன்று ஆயுதபாணிகள் இவர் மீது பலத்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பி சென்றுள்ளனர். இவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான ஐம்பெருமான் சத்தியசீலன் என்பவரே கொல்லப்பட்டவராவார்.
இவரது சடலம் பின்னர் சிலாபம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.