வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முஸ்லிம் இளைஞரொருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களுக்கிடையிலான மோதலிலேயே இவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிறைந்துறைச்சேனை நூரியார் வீதியைச் சேர்ந்த எம்.ரி.மஜீத் (30 வயது) என்பவரே ஞாயிறு மாலை 5.30 மணியளவில் குத்திக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட போதே அங்கு மரணமானார்.
மேற்படி இரு கட்சிகளதும் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதமே கைகலப்பாக மாறி பின்னர் கத்திக்குத்தில் முடிவடைந்தது.
இதுதொடர்பான விசாரணையை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.