Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஜெயராஜ் படுகொலை தொடர்பாக 75 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
[09 - April - 2008] [Font Size - A - A - A]
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயே கொன்றவரை அடையாளம் காண்பதற்காக தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் நேரடியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட வீடியோவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) ஆராய்ந்து வருகின்றனர்.

இதேநேரம், இந்தச் சம்பவம் தொடர்பாக பார்வையாளர்கள், மரதனோட்டப் போட்டியில் பங்குபற்றியோர் உட்பட நேற்று வரை 75 க்கும் மேற்பட்டோரிடம் சி.ஐ.டி.யினர் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே வந்தது முதல் குண்டு வெடிக்கும் வரையிலான நிகழ்வுகள் வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோ ஒளிப்பதிவு நாடாவைப் பெற்றுள்ள விசாரணைக் குழுவினர் அதனை மிக நுட்பமாக ஆராய்ந்து வருகின்றனர்.

தற்கொலைக் குண்டுதாரி மரதனோட்ட வீரர் போல் வந்தாரா அல்லது மரதனோட்டப் போட்டியை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தொடக்கிய போது பார்வையாளர் போல் அவ்விடத்திற்கு வந்தாரா என்பது குறித்தும் அவருடன் வேறு எவராவது வந்தார்களா என்பது குறித்தும் வீடியோ ஒளிப்பதிவை பயன்படுத்தி ஆராய்ந்து வருகின்றனர்.

இதேநேரம், இந்தப் போட்டியை ஏற்பாடு செய்தவர்கள் மீது பொலிஸார் கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். அந்தப் பகுதியில் மிக முக்கியமான ஒரு அமைச்சர் வருகின்ற போதும் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிய முறையில் செய்யவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட தேசிய அடையாள அட்டையொன்று தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த எவருடைய அடையாள அட்டையும் இது இல்லை என்பது விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக சி.ஐ.டி.யினர் தெரிவிக்கின்றனர்.

இந்த அடையாள அட்டை வாழைச்சேனையைச் சேர்ந்த வெள்ளைத்தம்பி முஹமட் அமீன் என்பவருடையதென கண்டறியப்பட்டுள்ளதால் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வாழைச்சேனை பொலிஸாரது உதவியும் பெறப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு ஒரு பொலிஸ் குழுவும் சென்றுள்ளது.

மேலும், தற்கொலைக் குண்டுதாரி அந்த இடத்திற்கு எப்படி வந்தார் என்பது குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக ஏழு பொலிஸ் குழுக்கள் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை நடத்துகின்றன. இதற்காக பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

தற்கொலைக் குண்டுதாரி சுமார் 5 கிலோ வெடிமருந்தைக் கொண்டு வந்திருக்கலாமென ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுவரை இச்சம்பவம் தொடர்பாக பெருமளவானோர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போதும் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Email this page Your Opinion Print this page
கிழக்கு தேர்தலின் பின் என்னை வெளியேற்ற கட்சி தீர்மானம் சூழ்ச்சிகளுக்கு அடிபணியேன்; தாயகத்திற்காக போராடுவேன்
வீரவன்ச தலைமையில் 11 எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தனித்து இயங்க முடிவு
தம்மிக கித்துல்கொட நியமன விவகாரம் பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி
11 ஜே.வி.பி எம்.பி.களுக்கும் எதிராக சட்டநடவடிக்கை
அரசியலமைப்புக்குட்பட்டதே கித்துல்கொடவின் நியமனம் சபாநாயகர் அறிவிப்பு; ஒத்துழைக்கமாட்டோம் என்கிறார் ரணில்
ஜெயராஜ் படுகொலை தொடர்பாக 75 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
இயற்கை அனர்த்தத்தை தவிர எக்காரணம் கொண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படாது; ஆணையாளர் தெரிவிப்பு
வாழைச்சேனையில் இளைஞன் குத்திக்கொலை
உடப்பில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
படுகொலை சம்பவம் தொடர்பாக மேலதிக விபரத்தை அன்றிரவு நான் அறிந்திருக்கவில்லை
`மும்மொழி பேசும் ஆற்றல் மிக்க அரசியல் தலைவர் அமரர் ஜெயராஜ்'
இடி, மின்னல் தாக்குதலால் இறப்பவர்கள் தொகை அடுத்த மாதம் அதிகரிக்கலாம்
அமைச்சரின் மறைவினால் கட்டானயில் பாதுகாப்பு
பேச்சுவார்த்தை மூலம் வன்முறையை அகற்றும்வரை ஜனநாயக அரசியல் செயற்பாடுகள் உருவாகாது
வவுனியா ஆஸ்பத்திரியில் 4 புலிகளின் சடலங்கள்
பாராளுமன்றத்தில் ஜெயராஜுக்கு அனுதாபம்
மலையகத்தின் பல்வேறு தொழிற்சங்கங்கள் மேதின நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு
சுதந்திரக் கட்சிக்கு பாரிய இழப்பு
புகைப்பிடித்தலால் வருடாந்தம் 23 ஆயிரம் பேர் மரணம்
யாழ்.குடா நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை
கிழக்குத் தேர்தலில் 1,072 வாக்குச்சாவடிகள்
அநுராதபுரம் வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு
`நான் பொய்ச்சாட்சியம் வழங்க வரவில்லை நடந்த உண்மைகளை கூறவே வந்தேன்'
நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை கண்டித்து கிறேக் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
குமுதினி படகுச்சேவை மீண்டும் இடைநிறுத்தம்
தற்கொலைத் தாக்குதலில் பலியானோர் காயமடைந்தோர் குடும்பங்களுக்கு நஷ்டஈடு
இலங்கை அகதிகளுடன் சென்ற 2 ஈரானியரிடம் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணை
வெள்ளைவான் ஆயுதபாணிகளால் குடும்பஸ்தர் கடத்தப்பட்டார்
அடிப்படை வசதிகளைவிட கல்வி வசதிகளை அபிவிருத்தி செய்வதில் முன்னிற்க வேண்டும்
யாழ்.குடாநாட்டில் மீண்டும் பாதீனியம் செடி பரவும் அபாயம்
கறிற்றாஸ் ஏற்பாட்டில் 45 உளவள பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்
இன்று திருமலையில் ஷ்ரீ சண்முகா மாணவிகளுக்கு பாராட்டு விழா; ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com