Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அரசியலமைப்புக்குட்பட்டதே கித்துல்கொடவின் நியமனம் சபாநாயகர் அறிவிப்பு; ஒத்துழைக்கமாட்டோம் என்கிறார் ரணில்
[09 - April - 2008] [Font Size - A - A - A]
பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகமாக தம்மிக கித்துல்கொடவின் நியமனம் அரசியலமைப்பை மீறியதோ அல்லது சட்டரீதியற்றதோ அல்லவென சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம் லொக்குபண்டார நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

தம்மிக கித்துல்கொடவின் நியமனம் அரசியலமைப்புக்கு முரணானது என்று ஐ.தே.க. நேற்று சபையில் சிறப்புரிமை மீறல் பிரச்சினை கிளப்பிய போது ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களையடுத்து சபாநாயகர் இதனை அறிவித்தார்.

ஆளும்தரப்புடன் இணைந்து சபாநாயகரும் வலியுறுத்தியமையால் இப்பிரச்சினை பாரிய சர்ச்சையாக வெடித்தது.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் தலைமையில் கூடிய போது அவர் பதில் செயலாளர் நாயகம் நியமனம் குறித்து சபையில் அறிவித்தார். இதன் போது சிறப்புரிமை பிரச்சினையொன்றை கிளப்பிய எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோஸப் மைக்கல் பெரேரா தெரிவித்ததாவது;

"தம்மிக கித்துல்கொட ஏற்கனவே அரசியலமைப்புச் சபையின் செயலாளராக உள்ளார். இந்நிலையில், அவரை எவ்வாறு பாராளுமன்ற பதில் செயலாளராக நியமிக்க முடியும்? மாயதுன்னே மற்றுமொரு பதவி வகிப்பதால் தான் அவரை அரசியலமைப்புச் சபைக்கு நியமிக்க முடியாதென அரசாங்கத்தரப்பில் கூறப்படுகிறது.

அப்படியானால், கித்துல்கொடவுக்கும் மாயதுன்னேக்கும் இருவேறு நீதியா? எதிர்கட்சி என்ற வகையில் நாம் இந்நியமனத்தை கடுமையாக எதிர்க்கிறோம். இது அரசியலமைப்புக்கு உட்பட்டதல்ல இந்நியமனம் சட்ட பூர்வமற்றது" என்றார்.

லக்ஷ்மன் கிரியெல்ல

இதன் போது ஐ.தே.க.யின் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கருத்து தெரிவிக்கையில்;

"பாராளுமன்ற செயலாளர் வெளி நாடு செல்லும் வேளையிலேயே பதில் செயலாளரை நியமிக்க முடியும். இந்நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரம் அவசியம்" என்றார்.

பிரதமர்

இதன் போது பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா கருத்து தெரிவிக்கும் போது;

"கித்துல்கொடவின் நியமனம் தற்காலிகமானதேயாகும். ஜனாதிபதி அரசியலமைப்பின் அங்கீகாரமின்றியே அண்மைய காலங்களில் நியமனங்களை மேற்கொண்டார் அது போன்றே இந்நியமனமுமாகும்.

கித்துல்கொட பாராளுமன்ற பதில் செயலாளராக நியமிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு உட்பட்டேயாகும். எவ்வகையிலும் இது அரசியலமைக்கு முரண்பட்டதல்ல" என்றார்.

இச்சமயம் ஆளும் தரப்பினர் தமது மேசைகளில் தட்டி பிரதமரின் கூற்றுக்கு வரவேற்புத் தெரிவித்த அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறுக்கிட்டுப் பேசுகையில்;

ரணில்

"ஆளும் தரப்பினர் எப்படித்தான் சத்தமிட்டாலும் அரசியலமைப்புக்கு முரணாக அரசாங்கம் செயற்படுவதை ஒரு போதுமே அனுமதிக்க மாட்டோம்" என்றார்.

சபாநாயகர்

இதன் போதும் சபாநாயகர் தெரிவித்ததாவது;

"பதில் செயலாளர் தம்மிக கித்துல்கொடவின் நியமனம் 14 நாட்களுக்கு மாத்திரமேயாகும். எனவே, அவரின் நியமனம் அரசியலமைப்புக்கு உட்பட்டதேயாகும்.

இந்நிலையில், பதில் செயலாளரை சபைக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன்" என்றார். இதையடுத்து தம்மிக கித்துல்கொட சபைக்கு வருகைதந்தார்.

இதன் போது ஐ.தே.க. எம்.பி.க்கள் தம்மிக்க கித்துல்கொடவிற்கு எதிராக கூக்குரலிட்டனர். அவர்கள் சபைககுள் நடுவே வந்து பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவே சபை நடவடிக்கைகளை சபாநாயகர் இடைநிறுத்தி வைத்தார்.

சபை நடவடிக்கைகள் 20 நிமிடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பமாகிய போதும் ஐ.தே.க.வின் போராட்டம் காரணமாக சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமமேற்பட்டதுடன் சபை இரு தடவைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டன. எனினும், நிலைமை சீரடையாத நிலையில் முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் நடந்தேறியது.

அத்துடன், சூழல் பேணல் சட்டமும் தொடர்ந்த கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியில் வாக்கெடுப்பின்றி சபையில் நிறைவேற்றப்பட்டது.

Email this page Your Opinion Print this page
கிழக்கு தேர்தலின் பின் என்னை வெளியேற்ற கட்சி தீர்மானம் சூழ்ச்சிகளுக்கு அடிபணியேன்; தாயகத்திற்காக போராடுவேன்
வீரவன்ச தலைமையில் 11 எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தனித்து இயங்க முடிவு
தம்மிக கித்துல்கொட நியமன விவகாரம் பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி
11 ஜே.வி.பி எம்.பி.களுக்கும் எதிராக சட்டநடவடிக்கை
அரசியலமைப்புக்குட்பட்டதே கித்துல்கொடவின் நியமனம் சபாநாயகர் அறிவிப்பு; ஒத்துழைக்கமாட்டோம் என்கிறார் ரணில்
ஜெயராஜ் படுகொலை தொடர்பாக 75 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
இயற்கை அனர்த்தத்தை தவிர எக்காரணம் கொண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படாது; ஆணையாளர் தெரிவிப்பு
வாழைச்சேனையில் இளைஞன் குத்திக்கொலை
உடப்பில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
படுகொலை சம்பவம் தொடர்பாக மேலதிக விபரத்தை அன்றிரவு நான் அறிந்திருக்கவில்லை
`மும்மொழி பேசும் ஆற்றல் மிக்க அரசியல் தலைவர் அமரர் ஜெயராஜ்'
இடி, மின்னல் தாக்குதலால் இறப்பவர்கள் தொகை அடுத்த மாதம் அதிகரிக்கலாம்
அமைச்சரின் மறைவினால் கட்டானயில் பாதுகாப்பு
பேச்சுவார்த்தை மூலம் வன்முறையை அகற்றும்வரை ஜனநாயக அரசியல் செயற்பாடுகள் உருவாகாது
வவுனியா ஆஸ்பத்திரியில் 4 புலிகளின் சடலங்கள்
பாராளுமன்றத்தில் ஜெயராஜுக்கு அனுதாபம்
மலையகத்தின் பல்வேறு தொழிற்சங்கங்கள் மேதின நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு
சுதந்திரக் கட்சிக்கு பாரிய இழப்பு
புகைப்பிடித்தலால் வருடாந்தம் 23 ஆயிரம் பேர் மரணம்
யாழ்.குடா நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை
கிழக்குத் தேர்தலில் 1,072 வாக்குச்சாவடிகள்
அநுராதபுரம் வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு
`நான் பொய்ச்சாட்சியம் வழங்க வரவில்லை நடந்த உண்மைகளை கூறவே வந்தேன்'
நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை கண்டித்து கிறேக் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
குமுதினி படகுச்சேவை மீண்டும் இடைநிறுத்தம்
தற்கொலைத் தாக்குதலில் பலியானோர் காயமடைந்தோர் குடும்பங்களுக்கு நஷ்டஈடு
இலங்கை அகதிகளுடன் சென்ற 2 ஈரானியரிடம் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணை
வெள்ளைவான் ஆயுதபாணிகளால் குடும்பஸ்தர் கடத்தப்பட்டார்
அடிப்படை வசதிகளைவிட கல்வி வசதிகளை அபிவிருத்தி செய்வதில் முன்னிற்க வேண்டும்
யாழ்.குடாநாட்டில் மீண்டும் பாதீனியம் செடி பரவும் அபாயம்
கறிற்றாஸ் ஏற்பாட்டில் 45 உளவள பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்
இன்று திருமலையில் ஷ்ரீ சண்முகா மாணவிகளுக்கு பாராட்டு விழா; ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com