* லால்காந்த கூறுகிறார்
பிழையான வழிநடத்தலின் அடிப்படையில் ஜே.வி.பி.யின் 11 எம்.பி.கள் செயற்படத் துணிந்தமை துரதிர்ஷ்டவசமானதெனத் தெரிவித்த அக்கட்சியின் முக்கிய சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான லால்காந்த 11 பேருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராயப்படுமெனவும் இது குறித்து பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஜே.வி.பி. க்குள் தற்போது தோன்றியுள்ள நெருக்கடி குறித்து அவர் `தினக்குரலு'க்கு மேலும் தகவல் தருகையில்;
இது எமது கட்சிக்கு புதிய விடயம் எனினும் பல சவால்களை சந்தித்த அனுபவம் எமது கட்சிக்கு மாத்திரமே அதிகமாகவுள்ளது. ஆம்; நாம் இச்சவாலை வெற்றிகொள்வோம். இதுபற்றி பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை.
தவறான வழிநடத்தலின் அடிப்படையில் 11 ஜே.வி.பி. எம்.பி.க்கள் செயற்படத் துணிந்தமை துரதிஷ்டவசமானது . இதுபற்றி எமது மத்திய குழு கூடி விரைவில் ஆராயும். இதன்போதே பாராளுமன்ற குழுத் தலைவர் நியமனம் பற்றியும் தீர்மானிப்போம் என்றார்.