Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
கிரிக்கெட் துளிகள்
[09 - April - 2008] [Font Size - A - A - A]
கெய்லுக்கு அபராதம்

* மேற்கிந்திய அணி கப்டன் கிறிஸ் கெய்லுக்கு போட்டிக் கட்டணத்தில் 70 சதவீதமும் அந்த அணி வீரர்களுக்கு 35 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பந்து வீசுகையில் அதிக நேரம் எடுத்துக் கொண்டதைத் தொடர்ந்து போட்டி நடுவர் கிறிஸ் புரோட் நடத்திய விசாரணை முடிவில் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

முதல் ஒரு நாள் போட்டி

* பாகிஸ்தான்- பங்களாதேஷ் அணிகளிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் போட்டி லாகூரில் நேற்று செவ்வாய்க்கிழமை பகல்- இரவு ஆட்டமாக நடந்தது.

தடையை நீக்க வேண்டும்

* இந்திய கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.) போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது. இந்தத் தடையை நீக்க வேண்டுமென்று சியால்கோட் மண்டல கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிபந்தனைகள் தளர்வு

* இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கு செய்தி சேகரிக்க செல்லும் நிருபர்கள் மற்றும் புகைப்பட நிபுணர்களுக்கு அந்த அமைப்பு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கான நிபந்தனைகள் தளர்த்தப்படுவதாக ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி அறிவித்துள்ளார். புதிய வழிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படுமென்றும் அவர் கூறினார்.

Email this page Your Opinion Print this page
ஐ.சி.எல் `ருவென்ரி -20' சாம்பியன் கிண்ணத்தை ஐதராபாத் ஹீரோஸ் அணி கைப்பற்றியது
தென்னாபிரிக்காவுடனான 3 ஆவது டெஸ்ட் இந்திய அணியிலிருந்து ஆர்.பி.சிங் நீக்கம்
லண்டனில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தடுக்கப்பட்டது குறித்து கவலை
மியாமி டெனிஸ் இறுதியாட்டத்தில் நடால் அதிர்ச்சித் தோல்வி
கிரிக்கெட் துளிகள்
ஐ.பி.எல். போட்டிக்கு முன் சச்சின் உடல்தகுதி பெற்றுவிடுவார்
`இந்தியாவுடனான கடைசி டெஸ்டிலும் ஆக்ரோஷமான பந்து வீச்சு தொடரும்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com