மியாமியில் நடைபெற்ற சொனி எரிக்சன் ஏபிடி மாஸ்டர்ஸ் டெனிஸ் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஸ்பெயினைச் சேர்ந்த உலகின் நம்பர் -2 வீரர் ரபேல் நடால்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் நிகோலே டேவிடென்கோ 6-4, 6-2 என்ற நேர் செட்களில் நடாலைத் தோற்கடித்து, சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினார்.
இப்போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்தவர்கள் இதுவரை கிண்ணம் வென்றது கிடையாது. அதற்கான வாய்ப்பை நடால் பெற்றிருந்தார். ஆனால், என்ன சாபமோ தன்னை விட தரநிலையில் குறைந்த டேவிடென்கோவிடம் நடால் தோற்றுப்போனார்.
போட்டித் தரநிலையில் நடால் 2 ஆவது இடத்திலும், டேவிடென்கோ 4 ஆவது இடத்திலும் இருந்தனர்.
இதற்கு முன் 6 முறை மியாமி போட்டியில் டேவிடென்கோ பங்கேற்றுள்ளார். ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன் 4 ஆவது சுற்றுக்கு முன்னேறியதே அவரது சிறப்பான முயற்சி.
2005 இல் நடந்த இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் -1 வீரர் ரோஜர் பெடரரிடம் நடால் வீழ்ந்தது நினைவு கூரத்தக்கது.