Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஐ.சி.எல் `ருவென்ரி -20' சாம்பியன் கிண்ணத்தை ஐதராபாத் ஹீரோஸ் அணி கைப்பற்றியது
[09 - April - 2008] [Font Size - A - A - A]
ஐ.சி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 2 ஆவது இறுதி ஆட்டத்தில் ஐதராபாத் ஹீரோஸ் அணி `போல்- அவுட்' முறையில் லாகூர் பாட்ஷா அணியை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை வென்றது.

ஐ.சி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 2 ஆவது இறுதி ஆட்டம் ஐதராபாத்தில் நடந்தது. இதில் ஐதராபாத் ஹீரோஸ் - லாகூர் பாட்ஷா அணிகள் மோதின.

முதலில் ஆடிய லாகூர் பாட்ஷா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்கள் எடுத்தது. இம்ரான் நசிர், இம்ரான் பர்கத் தலா 30 ஓட்டங்கள் எடுத்தனர். ஐதராபாத் ஹீரோஸ் அணியில் ரெட்டி 4 விக்கெட்டும், பின்னி 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் ஆடிய ஐதராபாத் ஹீரோஸ் அணி 19.4 ஓவர்களில் 130 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. இதனால் ஆட்டம் வெற்றி - தோல்வியின்றி முடிந்தது. ராயுடு ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்கள் எடுத்தார். லாகூர் அணியில் நவித் உல்-ஹசன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஆட்டம் `ரை' யில் முடிந்ததால் முடிவை நிர்ணயிக்க `போல் அவுட்' முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஐதராபாத் ஹீரோஸ் அணி 3-0 என்று வென்றது. அந்த அணியைச் சேர்ந்த போஜே, ரெட்டி, ஹாரிஸ் ஆகியோர் குறி தவறாமல் பந்து வீசி விக்கெட்டுகளை சாய்த்தனர். லாகூர் அணியில் நவித் உல்-ஹசன், ஷகித் நசிர், நவித் லத்தீப் ஆகியோர் வாய்ப்பை தவறவிட்டனர்.

3 இறுதிப்போட்டி ஆட்டங்கள் கொண்ட இந்தப் போட்டியில் முதல் போட்டியில் ஐதராபாத் ஹீரோஸ் அணி வென்றது. இதனால் அந்த அணி 2-0 என்ற வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. ஆட்டநாயகன்களாக நவித் உல்-ஹசன் (லாகூர் பாட்ஷா), ராயுடு (ஐதராபாத் ஹீரோஸ்) ஆகியோரும், தொடர் நாயகனாக அப்துல் ரசாக்கும் (ஐதராபாத் ஹீரோஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சாம்பியன் கிண்ணத்தை வென்ற ஐதராபாத் ஹீரோஸ் அணிக்கு வெற்றி கிண்ணத்துடன் 6 கோடி ரூபா பரிசாக வழங்கப்பட்டது. 2 ஆவது இடம் பிடித்த லாகூர் பாட்ஷா அணிக்கு 3 கோடி ரூபாவும் 3 ஆவது இடம்பெற்ற சென்னை சுப்ப ஸ்டார்ஸ் அணிக்கு இரண்டேகால் கோடி ரூபாவும் 4ஆவது இடம்பெற்ற கொல்கத்தா டைகர்ஸ் அணிக்கு ஒன்றரை கோடி ரூபாவும் பரிசாக வழங்கப்பட்டது.

Email this page Your Opinion Print this page
ஐ.சி.எல் `ருவென்ரி -20' சாம்பியன் கிண்ணத்தை ஐதராபாத் ஹீரோஸ் அணி கைப்பற்றியது
தென்னாபிரிக்காவுடனான 3 ஆவது டெஸ்ட் இந்திய அணியிலிருந்து ஆர்.பி.சிங் நீக்கம்
லண்டனில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தடுக்கப்பட்டது குறித்து கவலை
மியாமி டெனிஸ் இறுதியாட்டத்தில் நடால் அதிர்ச்சித் தோல்வி
கிரிக்கெட் துளிகள்
ஐ.பி.எல். போட்டிக்கு முன் சச்சின் உடல்தகுதி பெற்றுவிடுவார்
`இந்தியாவுடனான கடைசி டெஸ்டிலும் ஆக்ரோஷமான பந்து வீச்சு தொடரும்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com