`டிப்டொப்'பாக உடையணிந்த வாலிபர் ஒருவர், கொட்டாஞ்சேனையில் வீடு வீடாகச் சென்று நிதி திரட்டினார்.
தன்னை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் என அறிமுகம் செய்த அவர் வன்னியில் நோயாளர்களும், பெரியவர்களும் சிறுவர்களுமாக மருந்துவகை பற்றாக்குறையினால் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு மருந்து வகையை வாங்கி அனுப்பிவைக்க இருக்கிறோம் என்று தமிழில் உருக்கமாகச் சொன்னார்.
தன்னைப்போன்ற பட்டதாரி மாணவர்கள் ஆங்காங்கு நிதி திரட்டிவருவதாகவும் தெரிவித்தார்.
அந்த வீதியிலுள்ள பல வீடுகளில் இவர் பணம் வசூலித்த பின் ஒரு வீட்டிற்குச் சென்றபோது, அங்கிருந்த அனுபவஸ்தர் ஒருவர் "தம்பி! நீர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டதாரி மாணவன் என்கிறீர். உமது பல்கலைக்கழக அடையாள அட்டையைக் காட்டும்" என்றார்.
அந்த வாலிபர் விழி பிதுங்கியவாறு, சட்டைப் பைக்குள் கையை விட்டு துளாவிவிட்டு நைஸாக நழுவிவிட்டாராம்.
ஏமாற்றுப் பேர்வழிகள் எங்கும் நடமாடுகிறார்கள் எச்சரிக்கையாக இருங்கள்.