Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
திபெத் வன்முறைகளிலீடுபட்ட பிக்குகள் உட்பட முப்பது பேருக்கு சிறைத் தண்டனை
[01 - May - 2008] [Font Size - A - A - A]
லாஸா: திபெத்தில் அண்மையில் நடைபெற்ற வன்முறைகளுக்குக் காரணமான ஆறு புத்த பிக்குகள் உட்பட முப்பது பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனைகள் விதித்துள்ளது.

திபெத் தலைநகர் லாஸாவில் கடந்தமாதம் நடைபெற்ற பேரணியின்போது கலவரம் வெடித்ததில் பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்த அதேநேரம், ஏராளமான சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுமிருந்தன.

இதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட புத்த பிக்குகள் உட்பட்ட ஏராளமானோரை சீன அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்நிலையில் அவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் லாஸா நகரிலுள்ள இடைக்கால மக்கள் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கினை விசாரணை செய்த நீதிபதி கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி 6 பிக்குகள் உட்பட 30 பேருக்கு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

இதில் ஒரு புத்தபிக்குவிற்கு ஆயுள் தண்டனையும் மூவருக்கு இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஏனைய இருவருக்கு பதினைந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

Email this page Your Opinion Print this page
சர்தாரியுடனான முக்கிய பேச்சுகளுக்காக நவாஸ் ஷெரீப் டுபாய் விஜயம்
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் ஆப்கானுக்கு இரகசியப் பயணம்
திபெத் வன்முறைகளிலீடுபட்ட பிக்குகள் உட்பட முப்பது பேருக்கு சிறைத் தண்டனை
ஜோர்ஜியாவின் நடவடிக்கைகளுக்கு பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
பிலாவல் பூட்டோவுக்கு இம்ரான்கான் அறிவுரை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com