Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் ஆப்கானுக்கு இரகசியப் பயணம்
[01 - May - 2008] [Font Size - A - A - A]
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் ஆப்கானிஸ்தான் எல்லையில் கடமைபுரியும் பிரிட்டன் துருப்புகளை சந்திப்பதற்காக இரகசிய விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

தனது தந்தை இளவரசர் சார்ள்ஸ் மற்றும் பேத்தியாரான மகாராணி எலிசபெத் ஆகியோரின் அனுமதியுடனேயே இளவரசர் வில்லியம் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஆப்கானின் எல்லையிலுள்ள விமானப்படைத்தளத்தில் அங்குள்ள படையினருடன் மூன்று மணித்தியாலமளவிலான சந்திப்பொன்றை இளவரசர் வில்லியம் மேற்கொண்டுள்ளார்.

இளவரசரின் இந்த இரகசியப் பயணம் தொடர்பாக அவரது ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கையில்;

ஆப்கானிஸ்தானின் எல்லையில் கடமைபுரியும் பிரிட்டன் விமானப் படையினரின் போர் நடவடிக்கைகளில் தன்னையும் இணைத்துக் கொள்ளும் முகமாகவே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் இளவரசரின் இவ் இரகசியப் பயணமானது எந்தவிதமான தடையுமின்றி நிறைவடைந்துள்ளதெனத் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வாண்டின் ஆரம்பத்தில் இளவரசரின் சகோதரர் ஹரியும் பத்து வாரங்களுக்கு ேமலாக ஆப்கானின் எல்லைப் பிரதேசத்திலுள்ள ஹெல்மன்ட் மாகாணத்திலுள்ள பிரிட்டன் படையினருடன் பணிபுரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரது பயணம் மிகமிக இரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், இவர் பயணம் மேற்கொண்ட சிறிது நேரத்தின் பின்னர் இவரது பயணம் தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாலேயே இவரது நேரம் சுருக்கப்பட்டு இளவரசர் வில்லியம் உடனடியாக பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

Email this page Your Opinion Print this page
சர்தாரியுடனான முக்கிய பேச்சுகளுக்காக நவாஸ் ஷெரீப் டுபாய் விஜயம்
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் ஆப்கானுக்கு இரகசியப் பயணம்
திபெத் வன்முறைகளிலீடுபட்ட பிக்குகள் உட்பட முப்பது பேருக்கு சிறைத் தண்டனை
ஜோர்ஜியாவின் நடவடிக்கைகளுக்கு பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
பிலாவல் பூட்டோவுக்கு இம்ரான்கான் அறிவுரை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com