Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு விருது ஐந்து ஊடகவியலாளர் அமைப்புகள் ஏற்பாடு
[01 - May - 2008] [Font Size - A - A - A]
நாடுமுழுவதுமுள்ள பிராந்திய ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விருதுவழங்கிக் கௌரவிக்க ஐந்து ஊடக அமைப்புகளும் சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனமும் முன்னேற்பாடுகளைச் செய்துள்ளன.

மக்கள் சேவை ஊடகம் மற்றும் சகிப்புத்தன்மைக்கான ஊடகவிருது 2008 என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

சிறந்த ஊடக செயற்பாட்டுக்காக சகிப்புத் தன்மை மற்றும் மக்கள் சேவைக்கான பெறுமதியை விருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

வடக்கு, வடமத்திய, ஊவா, தெற்கு, கிழக்கு, மத்திய, வடமேல், சப்ரகமுவ ஆகிய ஒன்பது மாகாணங்களிலும் பிரதேச செய்தியாளராக இருப்பவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். மாகாண மட்டத்தில் வழங்கப்படும் மக்கள் சேவை ஊடகப் பெறுமதியை விருத்தி செய்வதற்கான விருது முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே 15,000, 10,000, 7,500 வீதம் பணப் பரிசில்கள் வழங்கப்படும். சகிப்புத் தன்மைக்கான விருதுக்கு பதிலாக பிரதேச மட்டத்தில் 10,000 ரூபா பணப்பரிசு வழங்கப்படும். மாகாண மட்டத்தில் பரிசளிப்பு விழா நடைபெறும்.

தேசிய விருது

ஒன்பது மாகாணங்களிலும் வெற்றி பெற்றோர் மத்தியில் சிறந்த அச்சு / வானொலி / தொலைக்காட்சி மற்றும் இணையத்தளம் ஆகிய ஊடகங்களில் தெரிவுசெய்யப்படும் சிறந்த ஆக்கங்களுக்கு கொழும்பில் நடைபெறவுள்ள பிரதான விருது வழங்கும் விழாவில் விருதுகள் வழங்கப்படும். மக்கள் சேவைக்கான விருதுடன் 75,000 ரூபா பணப் பரிசும், இரண்டாம் இடத்தை பெறுபவருக்கு 50,000 ரூபா பணப்பரிசும், மூன்றாம் இடத்தை பெறுபவருக்கு 30,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படும். சகிப்புத்தன்மைக்கான தேசிய விருதுக்காக 40,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படும்.

விண்ணப்பித்தல்

முறையான ஊடக செயற்பாட்டுக்காக சகிப்புத்தன்மை மற்றும் மக்கள் சேவை பெறுமதியை விருத்தி செய்தல் ஆகிய விருதுக்காக பிரதேச மட்டத்தில் செயற்படும் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளலாம். மக்கள் சேவை ஊடக விருது மற்றும் சகிப்புத் தன்மைக்கான விருது ஆகியவற்றுக்காக தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு தனித்தனியாக விண்ணப்பிக்காவிடின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை போட்டிக்கு அனுப்பும்போது அவற்றை CD யில் பதிவு செய்து அனுப்பவேண்டும். இந்த விருதுக்காக விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கும் ஊடகவியலாளர்கள் இலங்கையில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்கவேண்டும். சகல விண்ணப்பங்களுடனும் நீங்கள் சேவையாற்றும் நிறுவனத்தால் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிறுவன அடையாள அட்டை அல்லது அரச தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளின் பிரதிகளை இணைத்து அனுப்ப வேண்டும்.

குறிப்பிட்ட தினத்திற்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பதாரர் 2007 அக்டோபர் 2 ஆம் திகதி முதல் 2008 ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை அச்சு / வானொலி / தொலைக்காட்சி அல்லது இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட மேற்கண்ட தரத்துடனான செய்தி அறிக்கைகள், செய்திக் கட்டுரைகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் மூன்றை மாத்திரம் அனுப்பி வைக்கலாம். போட்டிக்கு முன்வைக்கும் ஆக்கங்கள் தொடர்பாக முதலாவது திருத்தம் மற்றும் பின்னணி அறிக்கைகளின் பிரதியொன்றையும் விண்ணப்பங்களுடன் அனுப்பி வைக்க வேண்டுமென்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

விருதுக்காக முன்வைக்க எதிர்பார்க்கும் மூன்று ஆக்கங்களுடன் மூன்று விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்து 2008 செப்டெம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும்படி கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும்.

இணைப்பாளர், மக்கள் சேவை ஊடக விருது 2008 1இ 1/1, 28 ஆவது ஒழுங்கை, ஃப்ளவர் வீதி, கொழும்பு - 03 , தொலைபேசி : 060 2144140, ஈமெயில் : psjaward2008 gmail.com

Email this page Your Opinion Print this page
பணவீக்கம் 29.9%
மகாபாரதத்தின் குருஷேத்திரம் இன்று கிழக்கில் அரங்கேற்றம்
கிழக்கு மக்களை தவறாக வழிநடத்த ரணில், ஹக்கீம் தீவிர முயற்சி
நாட்டை பாதுகாக்க தொழிலாளர்களை ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு
மே தினத்தை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு பேரணிகளை ஹெலிகள் கண்காணிக்கும்
ஐ.தே.க.முன்னாள் எம்.பி.வேலாயுதம் பிரசாரத்தில் ஈடுபட்டவேளை அச்சுறுத்தல்
தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றும் சட்டமூலத்திற்கு எதிராக மனு
இலங்கை தொடர்பாக ரொட்லியின் கருத்து குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை
அக்கரைப்பற்றில் மு.கா. வேட்பாளர் மீது தாக்குதல்
கிழக்கில் தேர்தல் வன்முறை அதிகரிப்பு
அந்தமான் கடலில் 60 இலங்கை மீனவர் இந்திய கரையோர காவல்படையினரால் கைது
வடக்கை தமிழருக்கும் கிழக்கை முஸ்லிம்களுக்கும் தாரைவார்க்க பிரதான இருகட்சிகளும் முயற்சி
மன்னாரில் பல பகுதிகளிலும் கடும் சமர்
`மன்னார் மோதலில் ஏழு படையினர் பலி'
மணலாறில் பரஸ்பர ஷெல் தாக்குதல் குடும்பஸ்தர் பலி; ஒருவர் காயம்
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள் மாணவனே சுட்டுக்கொலை
`பிரபாகரன்' திரைப்பட விவகாரம் சென்னை கீழ் நீதிமன்றம் விசாரிக்கத் தடை
நளினியை வெகுவிரைவில் விடுதலை செய்யக்கோரி மேல்நீதிமன்றில் மனு
ஷெல் காஸின் விலை 20 ரூபாவால் குறைப்பு
வவுனியாவில் ஐ.நா. பணியாளர் கைது
`உழைக்கும் மக்கள் எழுந்த தினத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்'
மே 8 இல் தேர்தல் ஒத்திவைப்பு மனு மீதான தீர்ப்பு
உழைக்கும் மக்களின் பலத்தை ஓரணியில் திரட்ட இந்தவருட மேதினம் முக்கியமானது
தொழிலாளரின் உரிமைகளை பாதுகாப்பது அரசின் பாரிய பொறுப்பும் கடமையுமாகும்
தேசத்தை வறுமைக்கோட்டிலிருந்து மீட்க உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடவேண்டும்
பரீட்சைக்கு தோற்றிய மாணவர் கவனத்திற்கு
விமானிகளுக்கு வருமானவரிக் குறைப்பு திருத்தச் சட்ட மூலம் உடனடியாக அமுல்
மனைவி, மகள்மாரை தாக்கியவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் தனியான அறை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டேன்
மண்சரிவு அபாயம் தோன்றியுள்ள பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேறுமாறு வேண்டுகோள்
மலையகத் தமிழ் மக்களின் சமூக ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
தோட்டத் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அடிமைத்தனமான கூட்டு ஒப்பந்தத்தை உடைத்தெறிவோம்
தொழிலாளர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் நாளே உண்மையான மே தினம்
தொழிலாளர் பலத்தை அதிகரிக்க இ.தொ.கா தலைமையில் ஒன்றுதிரள வேண்டும்
`பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் எமது மக்களை மீட்டெடுக்க மே தினத்தில் உறுதிபூணுவோம்'
சித்திரவதையிலிருந்து மக்களைக் காப்பாற்ற டாக்டர்கள்- சட்டத்தரணிகள் இணைந்து செயற்பட வேண்டும்
மடுதேவாலயத்தில் அனைத்து மக்களும் சுதந்திரமாக வழிபடக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்
திம்புல்வல பிரதேச தமிழ் மக்கள் அடையாள அட்டை பெறுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக விசனம்
கிழக்கு கோட்டையின் ஜனநாயக வாசல் தேர்தல் மூலமாக அகலத்திறந்துள்ளது
மீட்கப்பட்ட கிழக்கை பாதுகாப்பது அங்கு வாழும் மக்களின் பொறுப்பாகும்
முஸ்லிம் தேசத்துக்கென தனித்துவமாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ள முஸ்லிம் விடுதலை முன்னணி
கிழக்கு மாகாண மக்கள் தேர்தலில் ரவூப் ஹக்கீமுக்கு பாடம் புகட்டுவர்
தமிழ் சமூகத்துக்கு ஒரு விமோசனத்தைப் பெறவே ஜனாதிபதியின் அரசுடன் இணைந்துள்ளோம்
பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு விருது ஐந்து ஊடகவியலாளர் அமைப்புகள் ஏற்பாடு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com