Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மலையகத் தமிழ் மக்களின் சமூக ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
[01 - May - 2008] [Font Size - A - A - A]
*ம.ம.மு. மே தின பிரகடனம்

மலையகத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சமூக ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழித்து ஏனைய சமூகங்களுடன் சமமான நிலைக்கு இட்டுச் செல்வதற்கான விசேட நடவடிக்கைகளை அமுல்படுத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படல் வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள தொழிலாளர் தின பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மலையகத் மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

* வட கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளின் அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து பரந்துபட்டதோர் முன்னணியாக இருந்து அனைத்து தமிழ் மக்களின் மேம்பாட்டிற்காக செயற்படல் வேண்டும்.

வடகிழக்கில் இரு தரப்பினராலும் யுத்தம் நிறுத்தப்பட்டு அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தை உடன் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

* வடகிழக்கு, மலையகம், கொழும்பு, புறநகர் ஆகிய பகுதிகளில் சகல தரப்பினராலும் நடாத்தப்பட்டு வரும் ஆட்கடத்தல்கள், மனிதப் படுகொலைகள், கப்பம் பெறுதல் போன்றவைகள் உடன் நிறுத்தப்படல் வேண்டும்.

* வரலாற்று ரீதியாக மலையகத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அரசியல், சமூக, பொருளாதார அநீதிகளையும் படுகொலைகளையும் வெளிக்கொணர்வதற்கான நடவடிக்கைகளை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

* தற்போதுள்ள மிக மோசமான வாழ்க்கைச் செலவினை சமாளிப்பதற்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு பொருத்தமானதும் போதுமானதுமான நிவாரணம் வழங்கப்படல் வேண்டும்.

* பெருந்தோட்டத்துறைப் பிரச்சினைகளை ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில் தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகளும் ஆராயப்படல் வேண்டும்.

* இலங்கையின் இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வில் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும் வகையில் இம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை ஒன்றிணைத்து `சுயாட்சி அலகு' உருவாக்கப்படல் வேண்டும்.

* நடைமுறையிலுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர் நலன்களுக்கு விரோதமான சரத்துகள் நீக்கப்படுவதோடு தொழிலாளர் நலன்களை முன்னுரிமைப்படுத்தக்கூடியதும் சகல தொழிற்சங்கங்களையும் இணைத்துக்கொள்ளக்கூடியதுமான புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படல் வேண்டும்.

* இலங்கையில் ஏனைய துறைசார்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று தோட்டத்தொழிலாளர்களுக்கும் மாதச் சம்பளம் அல்லது வாழ்க்கைச் செலவுப் புள்ளி அடிப்படையில் பொருத்தமான சம்பளம் வழங்கப்படல் வேண்டும்.

* கம்பனித் தோட்டங்களிலும் அரச தோட்டங்களிலும் சிறு தோட்டங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கிடையே நிலவுகின்ற சம்பள முரண்பாடுகள் நீக்கப்பட்டு அனைவருக்கும் ஒரேயளவான சம்பளம் வழங்கப்படல் வேண்டும்.

* நட்டத்தில் இயங்கும் தோட்டங்களின் காணிகள் அங்கு பணியாற்றுகின்ற தொழிலாளர்களுக்கு பொருளாதார, விவசாய நடவடிக்கைக்காக பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும்.

* கம்பனி மற்றும் அரச தோட்டங்களை தனிப்பட்ட வர்த்தகர்களுக்கு கையளிப்பது நிறுத்தப்படல் வேண்டும்.

* தோட்டத் தொழிலாளர்களின் தொழில் நிலைமைகள் மேம்படுத்தப்படுவதோடு தொழில்சார்ந்த சுகாதாரப் பாதுகாப்பும் தொழில் பாதுகாப்பும் உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும்.

* பெண் தொழிலாளர்களின் வேலை நேரத்தை ஆறு மணித்தியாலங்களாகக் குறைத்தல் வேண்டும்.

* பெருந்தோட்டத்துறையில் சகல மட்டத் தொழிற் பிரிவுகளிலும் பெண்களுக்கு சம சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும்.

* தொழிலாளர்களின் வேலைப் பளுவை சுலபமாக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களும் கருவிகளும் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.

* மலையகத் தமிழ் மக்கள் தனியானதோர் தேசிய இனம் என்பதை அரசியல் யாப்பில் அங்கீகரிக்க வேண்டும்.

* வட கிழக்கு தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இனப்பிரச்சினைத் தீர்வாக அதிகாரம் பகிர்ந்தளிப்பிற்கான அலகுகள் ஏற்படுத்தப்படும்போது மலையகத் தமிழ் மக்களுக்கும் அதற்குச் சமாந்தரமான தீர்வு வழங்கப்படல் வேண்டும்.

* அரசியல் யாப்புச் சீர்திருத்தக் குழுவில் மலையகத் தமிழ்ப் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்படல் வேண்டும்.

* வடக்கிலும் கிழக்கிலும் இனிமேல் யுத்தம் நடைபெறாதவகையில் இயல்பு நிலை உருவாக்கப்பட்டு அங்கு வாழும் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அரசியல் தீர்வு காணப்படல் வேண்டும்.

* சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மலையகம், வடகிழக்கு, கொழும்பு மற்றும் புறநகர் ஆகிய பகுதி இளைஞர்கள் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்படல் வேண்டும்.

* மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமை தொடர்பாக நடைமுறையிலுள்ள பாகுபாடான முறைமைகள் நீக்கப்பட்டு ஏனைய சமூகங்களுக்கு சமமான சம பிரஜாவுரிமை அந்தஸ்து வழங்கப்படல் வேண்டும்.

* மலைய மக்களின் சனத்தொகை அடிப்படையில் அவர்களது பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதித்துவங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

* தொகுதி நிர்ணய ஆணைக்குழு அமைக்கப்படும்பொழுது அதில் மலையகத் தமிழ் பிரதிநிதிகளும் இடம்பெறுவது உறுதிப்படுத்தப்படல் வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Email this page Your Opinion Print this page
பணவீக்கம் 29.9%
மகாபாரதத்தின் குருஷேத்திரம் இன்று கிழக்கில் அரங்கேற்றம்
கிழக்கு மக்களை தவறாக வழிநடத்த ரணில், ஹக்கீம் தீவிர முயற்சி
நாட்டை பாதுகாக்க தொழிலாளர்களை ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு
மே தினத்தை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு பேரணிகளை ஹெலிகள் கண்காணிக்கும்
ஐ.தே.க.முன்னாள் எம்.பி.வேலாயுதம் பிரசாரத்தில் ஈடுபட்டவேளை அச்சுறுத்தல்
தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றும் சட்டமூலத்திற்கு எதிராக மனு
இலங்கை தொடர்பாக ரொட்லியின் கருத்து குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை
அக்கரைப்பற்றில் மு.கா. வேட்பாளர் மீது தாக்குதல்
கிழக்கில் தேர்தல் வன்முறை அதிகரிப்பு
அந்தமான் கடலில் 60 இலங்கை மீனவர் இந்திய கரையோர காவல்படையினரால் கைது
வடக்கை தமிழருக்கும் கிழக்கை முஸ்லிம்களுக்கும் தாரைவார்க்க பிரதான இருகட்சிகளும் முயற்சி
மன்னாரில் பல பகுதிகளிலும் கடும் சமர்
`மன்னார் மோதலில் ஏழு படையினர் பலி'
மணலாறில் பரஸ்பர ஷெல் தாக்குதல் குடும்பஸ்தர் பலி; ஒருவர் காயம்
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள் மாணவனே சுட்டுக்கொலை
`பிரபாகரன்' திரைப்பட விவகாரம் சென்னை கீழ் நீதிமன்றம் விசாரிக்கத் தடை
நளினியை வெகுவிரைவில் விடுதலை செய்யக்கோரி மேல்நீதிமன்றில் மனு
ஷெல் காஸின் விலை 20 ரூபாவால் குறைப்பு
வவுனியாவில் ஐ.நா. பணியாளர் கைது
`உழைக்கும் மக்கள் எழுந்த தினத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்'
மே 8 இல் தேர்தல் ஒத்திவைப்பு மனு மீதான தீர்ப்பு
உழைக்கும் மக்களின் பலத்தை ஓரணியில் திரட்ட இந்தவருட மேதினம் முக்கியமானது
தொழிலாளரின் உரிமைகளை பாதுகாப்பது அரசின் பாரிய பொறுப்பும் கடமையுமாகும்
தேசத்தை வறுமைக்கோட்டிலிருந்து மீட்க உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடவேண்டும்
பரீட்சைக்கு தோற்றிய மாணவர் கவனத்திற்கு
விமானிகளுக்கு வருமானவரிக் குறைப்பு திருத்தச் சட்ட மூலம் உடனடியாக அமுல்
மனைவி, மகள்மாரை தாக்கியவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் தனியான அறை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டேன்
மண்சரிவு அபாயம் தோன்றியுள்ள பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேறுமாறு வேண்டுகோள்
மலையகத் தமிழ் மக்களின் சமூக ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
தோட்டத் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அடிமைத்தனமான கூட்டு ஒப்பந்தத்தை உடைத்தெறிவோம்
தொழிலாளர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் நாளே உண்மையான மே தினம்
தொழிலாளர் பலத்தை அதிகரிக்க இ.தொ.கா தலைமையில் ஒன்றுதிரள வேண்டும்
`பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் எமது மக்களை மீட்டெடுக்க மே தினத்தில் உறுதிபூணுவோம்'
சித்திரவதையிலிருந்து மக்களைக் காப்பாற்ற டாக்டர்கள்- சட்டத்தரணிகள் இணைந்து செயற்பட வேண்டும்
மடுதேவாலயத்தில் அனைத்து மக்களும் சுதந்திரமாக வழிபடக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்
திம்புல்வல பிரதேச தமிழ் மக்கள் அடையாள அட்டை பெறுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக விசனம்
கிழக்கு கோட்டையின் ஜனநாயக வாசல் தேர்தல் மூலமாக அகலத்திறந்துள்ளது
மீட்கப்பட்ட கிழக்கை பாதுகாப்பது அங்கு வாழும் மக்களின் பொறுப்பாகும்
முஸ்லிம் தேசத்துக்கென தனித்துவமாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ள முஸ்லிம் விடுதலை முன்னணி
கிழக்கு மாகாண மக்கள் தேர்தலில் ரவூப் ஹக்கீமுக்கு பாடம் புகட்டுவர்
தமிழ் சமூகத்துக்கு ஒரு விமோசனத்தைப் பெறவே ஜனாதிபதியின் அரசுடன் இணைந்துள்ளோம்
பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு விருது ஐந்து ஊடகவியலாளர் அமைப்புகள் ஏற்பாடு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com