Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் தனியான அறை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டேன்
[01 - May - 2008] [Font Size - A - A - A]
* விடுவிக்கப்பட்ட மாணவன் தெரிவிப்பு

சம்பவதினம் என்னைப் பிடித்துச் சென்றவர்கள் முதலில் வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்று பின்னர் வேறு ஒரு வாகனத்தில் மாற்றி ஏற்றிச் செல்லப்பட்டதாக செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்ட செல்வராசா மணிவண்ணன் என்ற 17 வயது மாணவன் தினக்குரலுக்கு தெரிவித்தார்.

கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் தனியான அறை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டதாகவும், சோறும், சம்பலுமே உணவாக வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது; கண்டியில் உயர்தர வகுப்பு படிக்கிறேன் என்று நான் கூறியதும் கண்டியில் குண்டு வைக்கவா சென்றாய் என மிரட்டினார்கள்.

அத்துடன் கண்டியில் எங்கெல்லாம் போய் வந்தாய் எனவும் விசாரணை செய்தனர். இராணுவ சீருடையில் இருந்தவர்களே அங்கு காணப்பட்டனர்.

எனக்கு சிங்களம் ஓரளவுக்கு தெரியும் என்பதால் அவர்களின் சகல கேள்விகளுக்கும் சிங்கள மொழியிலேயே பதிலளித்தேன்.

வீட்டில் இருந்து வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டதும், கண்கள் கட்டப்பட்டது. என்ன வாகனம் என்று எனக்குத் தெரியாது. வாகனம் அதிக நேரம் சென்றது. பின்னர் வேறொரு வாகனத்தில் ஏற்றினார்கள்.

தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது எனது அப்பாவுடன் இரு முறை தொலைபேசியில் உரையாட அனுமதித்தனர்.

எனது கண்கள் நீண்ட நேரமாக கட்டப்பட்டு இருந்ததால் தற்போது பார்வை குறைவாகவே உள்ளது. என்னைக் கடத்தியவர்கள் யார் என்பது எனக்குத்தெரியாது.

நிலத்தில் படுக்கும் போது கை, கால் கட்டுகள் அவிழ்க்கப்பட்டு வெளிச்சத்தம் கேட்காதவாறு எனது காதுகள் அடைக்கப்படும்.

கடத்தியவர்கள் என்னை நல்ல முறையில் தான் நடத்தினார்கள். ஆனால் என்ன காரணத்துக்காக என்னைத் தடுத்துவைத்தனர் என்பதும் தெரியவில்லை.

தடுத்து வைத்திருந்தவர்கள் என்னிடம் எந்தக்கோரிக்கையையும் விடுக்கவில்லை. நேரத்துக்கு நேரம் சாப்பாடு தந்தார்கள்.

ஆரம்பத்தில் நான் உணவை உண்ண மறுத்தேன் ஆனால், உணவை உண்ணுமாறு கட்டாயப்படுத்தினார்கள்.

கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் விசாரணை முடிந்துவிட்டதாகவும், வீட்டுக்குப் போகலாம் எனவும் கூறினார்கள்.

ஆனால் அன்று விடுவிக்கப்படவில்லை. கொஞ்ச நேரத்துக்குப் பின்னர் புறப்படத் தயாராகுமாறு கூறினார்கள். இரவு அந்த நேரம் தெரியாது.

வாகனம் ஒன்றில் ஏற்றினார்கள். ஒரு மணி நேரமாக அந்த வாகனம் ஓடியது. வவுனியா மகாவித்தியாலயம் அருகில் இறக்கிவிட்டுத் திரும்பிப்பார்க்காமல் போகும்படி கூறினார்கள். திரும்பிப் பார்த்தால் சுடுவோம் என்று கடும் தொனியில் கூறினார்கள். நானும் அவர்கள் கூறியபடி திரும்பிப்பார்க்காமல் போனேன்.

அங்கிருந்து சூசைப்பிள்ளையார் குளத்தில் உள்ள எனது வீட்டுக்கு நடந்து வந்தேன்.

வீட்டுக்கு வந்ததும் பெற்றோர்களும் எனது சகோதரர்களும் என்னைக் கட்டிப்பிடித்து அழுதார்கள். அன்று காலை 8 மணியளவில் அப்பாவுடன் வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு சென்று நடந்த விடயங்களை தெரிவித்தேன் .

எனது வாக்கு மூலம் 20 பத்திரங்களில் பதிவு செய்யப்பட்டது. ஆஸ்பத்திரிக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு பொலிஸார் தெரிவித்திருந்தனர் என்றார்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு பெற்றோருடன் வீட்டில் இருந்தபோது இந்த மாணவன் கடத்திச் செல்லப்பட்டு 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டார்.

Email this page Your Opinion Print this page
பணவீக்கம் 29.9%
மகாபாரதத்தின் குருஷேத்திரம் இன்று கிழக்கில் அரங்கேற்றம்
கிழக்கு மக்களை தவறாக வழிநடத்த ரணில், ஹக்கீம் தீவிர முயற்சி
நாட்டை பாதுகாக்க தொழிலாளர்களை ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு
மே தினத்தை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு பேரணிகளை ஹெலிகள் கண்காணிக்கும்
ஐ.தே.க.முன்னாள் எம்.பி.வேலாயுதம் பிரசாரத்தில் ஈடுபட்டவேளை அச்சுறுத்தல்
தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றும் சட்டமூலத்திற்கு எதிராக மனு
இலங்கை தொடர்பாக ரொட்லியின் கருத்து குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை
அக்கரைப்பற்றில் மு.கா. வேட்பாளர் மீது தாக்குதல்
கிழக்கில் தேர்தல் வன்முறை அதிகரிப்பு
அந்தமான் கடலில் 60 இலங்கை மீனவர் இந்திய கரையோர காவல்படையினரால் கைது
வடக்கை தமிழருக்கும் கிழக்கை முஸ்லிம்களுக்கும் தாரைவார்க்க பிரதான இருகட்சிகளும் முயற்சி
மன்னாரில் பல பகுதிகளிலும் கடும் சமர்
`மன்னார் மோதலில் ஏழு படையினர் பலி'
மணலாறில் பரஸ்பர ஷெல் தாக்குதல் குடும்பஸ்தர் பலி; ஒருவர் காயம்
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள் மாணவனே சுட்டுக்கொலை
`பிரபாகரன்' திரைப்பட விவகாரம் சென்னை கீழ் நீதிமன்றம் விசாரிக்கத் தடை
நளினியை வெகுவிரைவில் விடுதலை செய்யக்கோரி மேல்நீதிமன்றில் மனு
ஷெல் காஸின் விலை 20 ரூபாவால் குறைப்பு
வவுனியாவில் ஐ.நா. பணியாளர் கைது
`உழைக்கும் மக்கள் எழுந்த தினத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்'
மே 8 இல் தேர்தல் ஒத்திவைப்பு மனு மீதான தீர்ப்பு
உழைக்கும் மக்களின் பலத்தை ஓரணியில் திரட்ட இந்தவருட மேதினம் முக்கியமானது
தொழிலாளரின் உரிமைகளை பாதுகாப்பது அரசின் பாரிய பொறுப்பும் கடமையுமாகும்
தேசத்தை வறுமைக்கோட்டிலிருந்து மீட்க உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடவேண்டும்
பரீட்சைக்கு தோற்றிய மாணவர் கவனத்திற்கு
விமானிகளுக்கு வருமானவரிக் குறைப்பு திருத்தச் சட்ட மூலம் உடனடியாக அமுல்
மனைவி, மகள்மாரை தாக்கியவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் தனியான அறை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டேன்
மண்சரிவு அபாயம் தோன்றியுள்ள பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேறுமாறு வேண்டுகோள்
மலையகத் தமிழ் மக்களின் சமூக ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
தோட்டத் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அடிமைத்தனமான கூட்டு ஒப்பந்தத்தை உடைத்தெறிவோம்
தொழிலாளர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் நாளே உண்மையான மே தினம்
தொழிலாளர் பலத்தை அதிகரிக்க இ.தொ.கா தலைமையில் ஒன்றுதிரள வேண்டும்
`பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் எமது மக்களை மீட்டெடுக்க மே தினத்தில் உறுதிபூணுவோம்'
சித்திரவதையிலிருந்து மக்களைக் காப்பாற்ற டாக்டர்கள்- சட்டத்தரணிகள் இணைந்து செயற்பட வேண்டும்
மடுதேவாலயத்தில் அனைத்து மக்களும் சுதந்திரமாக வழிபடக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்
திம்புல்வல பிரதேச தமிழ் மக்கள் அடையாள அட்டை பெறுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக விசனம்
கிழக்கு கோட்டையின் ஜனநாயக வாசல் தேர்தல் மூலமாக அகலத்திறந்துள்ளது
மீட்கப்பட்ட கிழக்கை பாதுகாப்பது அங்கு வாழும் மக்களின் பொறுப்பாகும்
முஸ்லிம் தேசத்துக்கென தனித்துவமாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ள முஸ்லிம் விடுதலை முன்னணி
கிழக்கு மாகாண மக்கள் தேர்தலில் ரவூப் ஹக்கீமுக்கு பாடம் புகட்டுவர்
தமிழ் சமூகத்துக்கு ஒரு விமோசனத்தைப் பெறவே ஜனாதிபதியின் அரசுடன் இணைந்துள்ளோம்
பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு விருது ஐந்து ஊடகவியலாளர் அமைப்புகள் ஏற்பாடு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com