அரசாங்கம் இலங்கை விமானிகளின் வருமான வரியை உடனடியாக குறைத்துள்ளது. விமானிகளின் வருமானத்திற்கமைய எதிர்காலத்தில் கூடிய அளவு வரி செலுத்த முடியாமை குறித்தே இந்நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது. 35% சதவீதமாக அறவிடப்பட்டு வந்த வரி 20% சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
வருமான வரி சட்டமூலத்திருத்தம் குழு நிலையில் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. 2008 வருடாந்த வரவு - செலவுத் திட்டத்தின் கீழ் உள்நாட்டு வருமான வரி திருத்தம் தொடர்பான பிரேரணைகள் உள்ளடக்கப்படவில்லை. ஆனால் திருத்தம் சம்பந்தமான பிரேரணை ஜனவரி 28 ஆம் திகதி 2008 இல் முன்வைக்கப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டன.
இதன் பிரகாரம் இது தொடர்பான ஆவணத்தில் வரி விதிக்கப்பட்ட தொகை, ஏப்ரல் முதலாம் திகதி முதல் உட்பட்டிருந்த இலாப முறைப்படி விமானிகளுக்கு எந்தவொரு விமான நிலையங்களிலும் கூடிய தொகையாக 20% வீத வரியே அறவிடப்பட வேண்டும்.
குறித்த சட்ட ஒழுங்கு விதி முறைகளுக்கமைய இலங்கை விமானிகளுக்கு அறவிடப்பட்டு வந்த வரித் தொகை 35% சதவீதமாக இருந்தது. இதன் பிரகாரம் ஆரம்பத் தொகை 3 இலட்சங்களுக்கு 5 வீதமாகவும் அடுத்த 2 இலட்சங்களுக்கு 10 முதல் 20 வீதமாகவும் அதன் பின் 35% வீதமாகவும் அறவிடப்பட்டது.