|
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்க்கப்பட்டு நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்துவரும் மாணவ, மாணவிகளில் கடந்த 2007 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் தோற்றி ஆகக்குறைந்தது 5ஏ புள்ளிகளைப் பெற்றுள்ளவர்களை மக்கள் பணிமனை "இக்ரஹ் இலவச கல்வி நிலையம்" சான்றிதழும், பாராட்டும் வழங்கி கௌரவிக்கத் தீர்மானித்துள்ளதாக மக்கள் பணிமனைத் தலைவர் மௌலவி பி.ஏ.எஸ். சுப்யான் தெரிவித்துள்ளார்.
இப் பரீட்சையில் தோற்றி ஆகக்குறைந்தது 5ஏ புள்ளிகளைப் பெற்ற மாணவ, மாணவிகள் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், க.பொ.த. சாதாரணதர பெறுபேற்று பிரதி ஆகியவற்றை எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் பணிமனை இல.07, தேசிய வீடமைப்பு வீதி, தில்லையடி, புத்தளம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது. |