Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`உழைக்கும் மக்கள் எழுந்த தினத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்'
[01 - May - 2008] [Font Size - A - A - A]
இன்றைய தினம், சிந்திய வியர்வைக்கு ஊதியம் கேட்டு எழுந்த உழைக்கும் மக்கள் தினம். சுமந்தவிலங்கை சிதற உடைக்க எழுந்த மக்கள், குருதியில் சரிந்து உரிமை பெற்ற தினம்! இழந்த உரிமைகளுக்காக எழுந்த மக்கள், பிறந்த உரிமைகளை பாதுகாத்து, இன்னமும் பிறக்க வேண்டிய உரிமைகளுக்காக போர்க்கொடி உயர்த்தும் தினம் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளது.

உலகத் தொழிலாளர்களோடு ஒடுக்கப்படுகின்ற தேசங்களின் மக்களும் ஒன்றுபட்டு எழுந்து தமது உரிமைகளுக்காக போராடவும் வாதாடவும் வேண்டிய வீரிய தினம்! இன்றைய தினத்தில் ஒடுக்கப்படுகின்ற தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காகவும் இன, மத பேதங்களை கடந்து இன ஐக்கியத்திற்காகவும் உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட எழுச்சிக்காகவும் உழைப்பதற்காக உறுதிகொள்ளும் தினம் எனவும் தெரிவித்துள்ள அக்கட்சி மேலும் தெரிவித்திருப்பதாவது;

இழந்த உரிமைகளை பெறுவதற்கு மாறாக இருந்த உரிமைகளையும் பறிகொடுத்த துயர் கதை தொடர்கின்றது. வெறும் அவலங்களுக்குள் மட்டும் சிறைப்பட்டு நிற்கும் எமது மக்கள் ஏன் என்று கேள்வி கேட்பதற்கும் உரிமை அற்றவர்களாக வாழ வேண்டிய நிலை! சுதந்திரமாக உண்மைகளை பேசவும் எழுதவும் விரும்பிய அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கும் உழைக்கும் மக்களின் உரிமைக்காக தொழிற்சங்கம் நடத்தவும் இருக்க வேண்டிய அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

எமது மக்களின் பெயரால் தொடர்கின்ற அழிவு யுத்தம் எமது மக்களையே நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. இடப்பெயர்வுகளையும் வீடிழந்து, சொந்த நிலமிழந்து அலையும் அகதி வாழ்வையும் உருவாக்கி கொடுத்திருக்கிறது. காணாமல் போதல், கண்ட இடத்தில் சுட்டுக்கொன்றொழித்தல் என அச்சம் தரும் வாழ்வையே எமக்கு மிச்சமாக்கி விட்டிருக்கின்றது.

உழைக்கும் மக்களின் உழைக்கும் சுதந்திரத்திற்காகவும் ஒடுக்கப்படுகின்ற எம் தேசத்து மக்களின் உரிமைகளுக்காகவும் முடிவுற்று தொடரும் அழிவு யுத்தம் தீர்வு தேடித் தரப்போவதில்லை. நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் நின்று மக்களுக்காக உழைக்கும் ஜனநாயக சக்திகள் பெறுகின்ற அரசியல் அதிகாரங்களே எமது மக்களை அவலங்களில் இருந்து மீட்டு அவர்களை சுதந்திரமான ஒரு தேசத்தில் வாழ வைப்பதற்கு வழி சமைக்கும். இன்று எம் மக்களுக்கு சோறும் தேவை! சுதந்திரமும் தேவை! அதற்கு தேவை நடைமுறை சாத்தியமான வழிமுறையில் மக்கள் நலன் சார்ந்து உழைக்கும் ஜனநாயக சக்திகளுக்கான அரசியல் அதிகாரங்களே! அடக்கும் அதிகாரங்களை உடைத்தெறிந்து அனைத்து அதிகாரங்களையும் எமது மக்களிடம் ஒப்படைக்க அனைத்து மக்களும் உறுதிகொண்டு எழ வேண்டும் என உழைப்பவர் தினத்தில் அறைகூவல் விடுக்கின்றோம்.

Email this page Your Opinion Print this page
பணவீக்கம் 29.9%
மகாபாரதத்தின் குருஷேத்திரம் இன்று கிழக்கில் அரங்கேற்றம்
கிழக்கு மக்களை தவறாக வழிநடத்த ரணில், ஹக்கீம் தீவிர முயற்சி
நாட்டை பாதுகாக்க தொழிலாளர்களை ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு
மே தினத்தை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு பேரணிகளை ஹெலிகள் கண்காணிக்கும்
ஐ.தே.க.முன்னாள் எம்.பி.வேலாயுதம் பிரசாரத்தில் ஈடுபட்டவேளை அச்சுறுத்தல்
தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றும் சட்டமூலத்திற்கு எதிராக மனு
இலங்கை தொடர்பாக ரொட்லியின் கருத்து குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை
அக்கரைப்பற்றில் மு.கா. வேட்பாளர் மீது தாக்குதல்
கிழக்கில் தேர்தல் வன்முறை அதிகரிப்பு
அந்தமான் கடலில் 60 இலங்கை மீனவர் இந்திய கரையோர காவல்படையினரால் கைது
வடக்கை தமிழருக்கும் கிழக்கை முஸ்லிம்களுக்கும் தாரைவார்க்க பிரதான இருகட்சிகளும் முயற்சி
மன்னாரில் பல பகுதிகளிலும் கடும் சமர்
`மன்னார் மோதலில் ஏழு படையினர் பலி'
மணலாறில் பரஸ்பர ஷெல் தாக்குதல் குடும்பஸ்தர் பலி; ஒருவர் காயம்
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள் மாணவனே சுட்டுக்கொலை
`பிரபாகரன்' திரைப்பட விவகாரம் சென்னை கீழ் நீதிமன்றம் விசாரிக்கத் தடை
நளினியை வெகுவிரைவில் விடுதலை செய்யக்கோரி மேல்நீதிமன்றில் மனு
ஷெல் காஸின் விலை 20 ரூபாவால் குறைப்பு
வவுனியாவில் ஐ.நா. பணியாளர் கைது
`உழைக்கும் மக்கள் எழுந்த தினத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்'
மே 8 இல் தேர்தல் ஒத்திவைப்பு மனு மீதான தீர்ப்பு
உழைக்கும் மக்களின் பலத்தை ஓரணியில் திரட்ட இந்தவருட மேதினம் முக்கியமானது
தொழிலாளரின் உரிமைகளை பாதுகாப்பது அரசின் பாரிய பொறுப்பும் கடமையுமாகும்
தேசத்தை வறுமைக்கோட்டிலிருந்து மீட்க உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடவேண்டும்
பரீட்சைக்கு தோற்றிய மாணவர் கவனத்திற்கு
விமானிகளுக்கு வருமானவரிக் குறைப்பு திருத்தச் சட்ட மூலம் உடனடியாக அமுல்
மனைவி, மகள்மாரை தாக்கியவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் தனியான அறை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டேன்
மண்சரிவு அபாயம் தோன்றியுள்ள பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேறுமாறு வேண்டுகோள்
மலையகத் தமிழ் மக்களின் சமூக ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
தோட்டத் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அடிமைத்தனமான கூட்டு ஒப்பந்தத்தை உடைத்தெறிவோம்
தொழிலாளர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் நாளே உண்மையான மே தினம்
தொழிலாளர் பலத்தை அதிகரிக்க இ.தொ.கா தலைமையில் ஒன்றுதிரள வேண்டும்
`பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் எமது மக்களை மீட்டெடுக்க மே தினத்தில் உறுதிபூணுவோம்'
சித்திரவதையிலிருந்து மக்களைக் காப்பாற்ற டாக்டர்கள்- சட்டத்தரணிகள் இணைந்து செயற்பட வேண்டும்
மடுதேவாலயத்தில் அனைத்து மக்களும் சுதந்திரமாக வழிபடக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்
திம்புல்வல பிரதேச தமிழ் மக்கள் அடையாள அட்டை பெறுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக விசனம்
கிழக்கு கோட்டையின் ஜனநாயக வாசல் தேர்தல் மூலமாக அகலத்திறந்துள்ளது
மீட்கப்பட்ட கிழக்கை பாதுகாப்பது அங்கு வாழும் மக்களின் பொறுப்பாகும்
முஸ்லிம் தேசத்துக்கென தனித்துவமாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ள முஸ்லிம் விடுதலை முன்னணி
கிழக்கு மாகாண மக்கள் தேர்தலில் ரவூப் ஹக்கீமுக்கு பாடம் புகட்டுவர்
தமிழ் சமூகத்துக்கு ஒரு விமோசனத்தைப் பெறவே ஜனாதிபதியின் அரசுடன் இணைந்துள்ளோம்
பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு விருது ஐந்து ஊடகவியலாளர் அமைப்புகள் ஏற்பாடு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com