ஷெல் காஸ் சமையல் எரிவாயுவின் விலை நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் இருபது ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஷெல் காஸ் சமையல் எரிவாயு நிறுவனத்தின் நிதி முகாமையாளர் றெமோ செல்டீன் தெரிவித்துள்ளார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு 1,749 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுவந்த 12.5 கிலோ வீட்டுப் பாவனை சிலிண்டரின் விலை 1,729 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2.3 கிலோ நிறையுடைய வீட்டுப் பாவனை சிலிண்டரின் விலை தற்போதைய விலையான 318 ரூபாவிலிருந்து நான்கு ரூபாவால் குறைக்கப்பட்டு 314 ரூபாவாக விற்பனை செய்யப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.